Tuesday, December 8, 2009

இந்திய மொழிகளில் குறுந்தகவல்

0 comments
இந்திய மொழிகளில் குறுந்தகவல் (SMS)எழுதுதல் மற்றும் அனுப்புதல்

இது ஒரு கைபேசி மென்பொருள் பற்றிய தகவல்.  இம்மென்பொருளில் நீங்கள் பல்வேறு இந்திய மொழிகளான இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, வாங்க மொழி மற்றும் பஞ்சாபி மொழிகளில் குறுந்தகவல் செய்தி அனுப்பலாம்.  இதில் நீங்கள் வழக்கமான ஆங்கில மொழியை உங்கள் பிராந்திய மொழி உச்சரிப்பிலேயே தட்டச்சு செய்யலாம்.  உதாரணமாக நீங்கள் தகவலை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இந்தியில் அனுப்பலாம்.

Hindi SMS iPhone Send SMS Hindi

இதற்காக நீங்கள் தட்டச்சு எதுவும் கற்றுக்கொள்ள தேவையில்லை.  இச்சேவை தற்பொழுது இந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது.  மேற்குறிப்பிட்ட மொழிகளில் விரைவில் சேவையை விரிவாக்கப்படுமென கூறப்படுகிறது.

இது ஜாவா வசதியுள்ள கைபேசிகளில் மட்டுமே வேலைசெய்யும் அதாவது பெரும்பாலான நோக்கியா போன்களில் செயல்படும்.  இச்சேவை தற்பொழுது சோதனை பதிப்பாக மாதம் ரூ.149/- க்கு கிடைக்கிறது கிடைக்கிறது.

இதனை சோதித்து பார்க்க நீங்கள் Quillpad என தட்டச்சு செய்து அதனை 57333 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.

Monday, December 7, 2009

யு.எஸ்.பி. டிரைவில் குரோம் ஓ.எஸ்.

0 comments

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent)தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது. நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால், http://carbon.hexxeh.net/chromiumos/ என்ற முகவரியில் கிடைக்கும், பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Sunday, December 6, 2009

புதிய ஐஎம்இஐ எண்கள் சில நாளில் செயலிழக்கும்

2 comments

சீன செல்போன்களுக்கு அசல் ஐஎம்இஐ எண் பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகு பெறப்படும் எண்கள் சில நாட்களில் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு இணைப்பை ரத்து செய்ய போன் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டது.
அதற்கான காலக்கெடு கடந்த 30ம் தேதி முடிந்தது. அதற்கு முன் சில மாதங்களாக சீன செல்போன்களுக்கு அசலான ஐஎம்இஐ எண்ணைப் பெற செல்போன் நிறுவனங்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வசதியும் கடந்த 30ம் தேதியோடு முடிந்த நிலையில், சில நிறுவனங்கள் ரூ.300 முதல் ரூ.500 வரை பெற்றுக் கொண்டு தொடர்ந்து ஐஎம்இஐ எண் அளித்து வருகின்றன.
நிபுணர் ஒருவர் கூறுகையில், காலக்கெடு முடிந்த பிறகு ஐஎம்இஐ எண் அளிப்பது சட்ட விரோதம். இப்போது பெறப்படும் எண்களுக்கு செல்போன் நிறுவனங்கள் சங்கம் பொறுப்பேற்காது. அவை  சில நாட்களில் ரத்தாகி விடும் என்றார்.

இன்னிலையில் ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் தங்களது தயாரிப்பில் உள்ள ஐஎம்இஐ எண் நம்பகமானதுதான் என தமது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் உறுதி அளித்துள்ளது.

மேலும் ஸ்பைஸ் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அருகில் உள்ள விநியோகஸ்தரிடம் சென்று இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

--தினகரன்

3 ஜி: 94455 55555 எண் ரூ1.8 லட்சத்துக்கு ஏலம்-பிஎஸ்என்எல்லுக்கு ரூ.8 லட்சம் லாபம்!

0 comments

பி.எஸ்.என்.எல். 3 ஜி மொபைல் போன் எண்களை ஏலத்தில் விட்டதில் சென்னையில் 8 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

அதிகபட்சமாக, ஒரு எண் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ கால் வசதி கொண்ட 3 ஜி சேவையை சமீபத்தில் பி.எஸ்.என்.எல். சென்னையில் அறிமுகப்படுத்தியது.

இந்த சேவையை தங்களுக்குப் பிடித்தமான பேன்ஸி எண்களுடன் பெற போட்டி போட்டனர் வாடிக்கையாளர்கள். எனவே வாடிக்கையாளரின் இந்த ஆர்வத்தை காசாக்கும் முயற்சியில் இறங்கிய பிஎஸ்என்எல், 292 'பேன்சி' எண்களை ஏலத்தில் விட முடிவு செய்தது.

ஏற்கனவே, 2 ஜி சேவைக்கான எண்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்த அனுபவம் பிஎஸ்என்எல்லுக்கு உண்டு.

எனவே 3 ஜி எண்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் ஒவ்வொரு பேன்சி எண்ணுக்கும் குறைந்த பட்ச தொகையாக ஆயிரம், 2,000, 3,000 என நிர்ணயிக்கப்பட்டு நூறின் மடங்காக ஏலம் கேட்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஏலத்தில், 93 எண்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த, '3 ஜி' எண்கள் அனைத்தும் 94455 என துவங்குமாறு அமைந்துள்ளது.

இந்த ஏலத்தில் குறிப்பாக 94455 55555 என்ற எண் மட்டும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 99999 என முடியும் எண், 77 ஆயிரம் ரூபாய்க்கும், 56789 என முடியும் எண், 62 ஆயிரம் ரூபாய்க்கும், 66666 என முடியும் எண் 30,300 ரூபாய்க்கும், 12345 என முடியும் எண் 30 ஆயிரம் ரூபாய்க்கும், 94455 என முடியும் எண் 28 ஆயிரத்திற்கும், 11111 என முடியும் எண் 15 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டன.

இதன் மூலம், மூலம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.

மீதியுள்ள எண்கள் அடுத்த வாரம் ஏலம் விடப்படுமாம்.

சர்வீஸை துவங்கியது சர்ச்சைக்குரிய டெலினார்

0 comments

பெரும் சர்ச்சைக்கும் சந்தேகப் பார்வைக்கும் ஆளான டெலினார்- யூனிடெக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான யூனினார் தனது மொபைல் சேவையைத் துவங்கியது.

நார்வேயைச் சேர்ந்த நிறுவனம் டெலினார். இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கின் 74 சதவீதப் பங்குகளை சர்ச்சைக்குரிய முறையில் வாங்கியது இந்த நிறுவனம். பின்னர் யூனிடெக்கின் பெயரைப் பயன்படுத்தி பல பெயர்களில் இந்தியாவில் கூட்டாக மொபைல் சேவையைத் துவங்க லைசென்சுக்கு விண்ணப்பித்தது.

போட்டியிட்ட பிற நிறுவனங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்த நிறுவனத்துக்குதான் 2 ஜி அலைவரிசையை ஒதுக்கியது மத்திய தொலைத் தொடர்புத் துறை.

பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வெறும் ரூ.1651 கோடிக்கு யூனிடெக் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
UNINOR

அதுமட்டுமல்ல, 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெறும்வரை டெலினார் நிறுவனத் தொடர்பு பற்றி பேசாமல் இருந்த யூனிடெக், அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அடுத்த சில வாரங்களுக்குள் டெலினாருடன் கூட்டணி சேர்ந்ததாக அறிவித்து, தனது 60 சதவிகித பங்குகளையும் டெலினாருக்கு மாற்றியது. யாரும் பிரச்சனை செய்யக் கூடாது என்பதால், யூனினார் என்ற புது நிறுவனத்தை கணக்கில் கொண்டு வந்தது.

இதனைக் கவனித்த இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத் துறை யூனிடெக்கின் மொபைல் சர்வீசுக்கு அனுமதி தருவதை நிறுத்தி வைத்தன.

அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இது மிகமிக முக்கியாமானது. இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது இந்த டெலினார் நிறுவனம். இவர்களிடம் 2 ஜி அலைவரிசையை ஒப்படைத்தால் தேசத்தின் பாதுகாப்பு என்ன ஆவது என்று பாதுகாப்புத் துறை எழுப்பிய கேள்விக்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்.

மாறாக உயர்மட்ட அளவில் நடந்த பேரங்களுக்குப் பின் யூனினார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.

இந் நிலையில் தான் அமைச்சர் ராஜாவின் அலுவலகம் சிபிஐ சோதனைக்கு உள்ளானதும், ராஜா விசாரிக்கப்பட்டதும் நினைவிருக்கும்.

இப்போது அதே யூனினார் நிறுவனம் கோலாகலமாக தனது மொபைல் சர்வீஸைத் துவங்கியுள்ளது.

இந்த புதிய மொபைல் சேவையில் உள்ளூர் கட்டணம் வெறும் 29 பைசாதான். எஸ்டிடி கட்டணம் 49 பைசா.

எடுத்த எடுப்பிலேயே 7 தொலைத் தொடர்பு வட்டங்கள், 1000 டீலர்கள், ரூ 2620 முதலீடு என பிற நிறுவனங்களை ஆட்டம் காண வைக்கும் வேகத்துடன் வருகிறது யூனினார்.

Thursday, December 3, 2009

தடை செய்தாலும் இயங்கும் சீன செல்போன்கள்...

0 comments

கடந்த சில தினங்களாக 'ஐ.எம்.இ.ஐ. எனப்படும் ரகசிய எண்கள் இல்லாத செல்போனா... இனி செல்லாது செல்லாது' என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தது.


ஆனால், இப்போது அந்தத் தடை செல்லுபடியாகவில்லை. காரணம் அரசு பரிந்துரைத்து, செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்திய செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் முழுமையாக பலனளிக்கவில்லையாம்.


ரகசிய குறியீட்டெண்கள் இல்லாத செல்போன்கள் தேச விரோத சக்திகளின் செயலுக்கு துணைபோகும்... எனவே அவற்றை அடியோடு செயலிழக்க வைக்கப் போகிறோம் என மத்திய அரசு அறிவித்தது.



இதன்படி ஐஎம்இஐ எண்கள் இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக்கும் நிலை தோன்றியது. நவம்பர் 30-ம் தேதிக்குள் எல்லா செல்போன் சேவை நிறுவனங்களும், இந்த செயலிழப்பு தொழில்நுட்பத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


அதேபோல வாடிக்கையாளர்களும் நவம்பர் 30க்குள் தங்கள் இணைப்பை ஐ.எம்.இ.ஐ. உள்ள மொபைலுக்கு மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் தங்களிடம் உள்ள போன்கள் ஐ.எம்.இ.ஐ. எண் உள்ளதுதானா என அறிய எஸ்எம்எஸ் ஒன்றையும் அனுப்பச் சொல்லியிருந்தனர்.



இந்த வகையில் அனைத்து செல்போன் நிறுவனங்களுமே கணிசமாக லாபம் பார்த்தனவாம்.



இந் நிலையில், சிலர் ஐ.எம்.இ.ஐ. இல்லாத மொபைலுக்கு, ரகசிய எண் தருவதாக தலா ரூ. 200 வசூலித்த கதையும் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளதாம்.  இதையெல்லாம் செய்ய முடியாத சிலர், வருவது வரட்டும் என்று அப்படியே விட்டுவிட்டனர்.



ஆனால் நவம்பர் 30க்குப் பிறகு இயங்காது என்று கருதப்பட்ட, ரகசிய எண்கள் இல்லாத செல்போன்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் பழையபடியே இயங்கின. அரசுத் துறை மொபைல் சர்வீஸான செல் ஒன் இணைப்பு பெற்ற போன்களும் கூட இயங்கின என்பது கூடுதல் செய்தி.


இதுகுறித்து தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அரசு எங்களுக்குப் பரிந்துரைத்த தொழில்நுட்பத்தைப் பிரயோகித்துவிட்டோம். ஆனால் அது முழுமையாக வேலை செய்யவில்லை. ஆனால் இதற்காக அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொழில்நுட்ப சிக்கலை சரி செய்து மீண்டும் தடை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.


இந் நிலையில் ஐஎம்இஐ எண்கள் உள்ள, சீனா மற்றும் கொரிய மொபைல்களை இனி தருவிக்க மொபைல் விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாம்.


இதற்கிடையே, ஐஎம்இஐ எண்கள் இல்லாத போன்களுக்குரியவர்கள் அந்த எண்ணைப் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு, புதுவைக்கான செல்போன் டீலரான அமீத் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எண்கள் பெற ஒரு வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஐஎம்இஐ எண் இல்லாததால் துண்டிக்கப்பட்ட போன் வைத்திருப்பவர்கள் இந்த எண்ணைப் பெற விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

மொபைல்களுக்கு 11 இலக்க எண்கள்: டிராய் ஆலோசனை

0 comments

மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகப் பெருக அவர்களுக்கு எண்கள் ஒதுக்குவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றன மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள்.

இப்பிரச்சனையைச் சமாளிக்க இதுவரை 10 இலக்க எண்களாக இருந்த மொபைல் எண்களை இனி 11 இலக்கத்துக்கு மாற்றப்போகிறார்களாம்.

இதுகுறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தீவிர ஆலோசனை செய்து வருகிறது.

ஆனாலும், இது தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் எவ்விதமான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை என்றும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில், கடந்த அக்டோபர் வரை, புதிதாக 1.70 கோடி பேர், மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ளனர். மொத்தம் 48 கோடி பேரிடம் மொபைல் போன் இணைப்புகள் உள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.

Related Posts with Thumbnails