"டெலி மார்க்கெட்டிங் சர்வீஸ்' மற்றும் "வாடிக்கையாளர் சேவை' என்ற பெயரில், மொபைல் போன் சந்தாதாரர்களை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வது கோவை, திருப்பூரில் அதிகரித்துள்ளது. இதற்கு துணைபோகும், தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் மீது, தொலை தொடர்பு ஆணையம் (டிராய்) கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாடிக் கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தனியார் மொபைல் போன் நிறுவனங்களின் சந்தாதாரர்களை போனில் தொடர்பு கொள்ளும் டெலி மார்க்கெட் டிங், சேவை நிறுவனங்களைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் இனிமையான குரலில் கிரெடிட் கார்டு, இன்சூரன்ஸ், வங் கிக் கடன் உள்ளிட்ட தேவை களை பூர்த்தி செய்து தருவதாக நயமாக பேசுகின்றனர். இது போன்ற தொந்தரவு "கால்'களை பெரும்பாலான சந்தாதாரர்கள் விரும் புவதில்லை. இவர்களது இடைவிடாத தொல்லையால், அலுவலக வேலையில் இருப் போர், வாகனம் ஓட்டுவோர் "டென்ஷனுக்கு' உள்ளாகின்றனர். "ஏதாவது அவசர அழைப்பாக இருக் குமோ' என நினைத்து அழைப்பை ஏற்றால், மறுமுனையில் பெண் ஊழியர் பேச ஆரம் பித்து விடுகிறார். அழைப்பை ஏற்ற நபர் எந்தச் சூழ்நிலையில் உள்ளார், என்பதை பற்றி அவர் சிறிதும் கவனத்தில் கொள்வதில்லை. இவ்வாறு, மொபைல் போன் சந்தாதாரர்களை "சேவை நிறுவனங்கள்' என்ற பெயரில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய, தனியார் மொபைல் போன் சேவை (ஆபரேட்டர்கள்)நிறுவனங்களும் உடந்தையாக இருக் கின்றன. இத்தகைய மொபைல் போன் சேவை நிறுவனங்கள், தங்களது சந்தாதாரர்களின் முகவரி மற்றும் மொபைல் எண்களை, தனி நபர் நடத்தும் டெலிமார்க் கெட்டிங் சர்வீஸ் மற்றும் பிற சேவை நிறுவனங்களுக்கு "மத்திய தொலை தொடர்பு ஆணையத்தின்' (டிராய்) விதிகளை மீறி எப்படி வழங்குகின்றன? என்ற கேள்வி எழுந் துள்ளது.
டெலிமார்க்கெட்டிங் நிறுவனங் கள் மட்டுமின்றி, சில மொபைல் போன் சேவை நிறுவனங்களும் புதிது, புதிதாக சேவைகளை துவக்கி, வாடிக்கையாளர்களின் விருப் பத்தை கோராமலே பல வசதிகளை அளித்து விடுகின்றன. மிஸ்டு கால் அலர்ட், நியூஸ் அலர்ட், ஜோக் அலர்ட் என பலவித சேவைகளை தாங்களாகவே அளித்துவிட்டு, சந்தாதாரர்களின் கட்டணத்தில் தொகையை ஏற்றி விடுகின்றனர்; இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாராவது கேள்வி எழுப்பினால் மட்டுமே அந்த சேவையை ரத்து செய்து ஒதுங்கிக் கொள்கின்றனர். இவை தவிர, மேலும் பல தொந்தரவுகளையும் சந்தாதாரர்கள் அனுபவித்து வருகின்றனர். சமீப காலமாக 13 இலக்கம் கொண்ட எண்களிலிருந்து "ஹலோ டியர், ஹாய் டியர்' என்ற எஸ்.எம்.எஸ்., தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டு வருகின்றன. இதை பார்த்ததும், சில வாடிக்கையாளர்கள் பதில் மெசேஜ் அனுப்பும் போது, அதற்கு ஒரு ரூபாய் கட்டணத்தை "பில்' தொகையில் சேர்த்துவிடுகின்றனர்.
மொபைல் போன்களில் "வாடிக்கையாளர் சேவை' என்ற பெயரில் கட்டணச் சுரண்டலில் ஈடுபடுவதாக தனியார் மொபைல் போன் நிறுவனங்கள் மீது அதிகளவில் புகார் எழுந்துள்ளது. மேலும், தனியார் மொபைல் போன் சேவை நிறுவனங்கள், தங்களது "மதிப்பு கூட்டு சேவை' பற்றி முன்பே பதிவு செய்யப்பட்ட தகவலை, வாடிக்கையாளர்களுக்கு தானியங்கி வாய்ஸ் சேவை மூலம் அளிக்கின்றனர். இந்த அழைப்பை ஏற்கும் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைகின்றனர். காரணம், வாகனம் ஓட்டும் போது, அலுவலக பணியில் இருக்கும் போது என, கண்ட நேரத்தில் எல்லாம், ஏன் இரவு 10.00 மணிக்கு மேல் கூட, அழைப்பு வருகிறது. இது போன்ற விதிமீறல் தொந்தரவுகளை தொலை தொடர்பு ஆணையம் வரைமுறைப்படுத்திட வேண்டும் என, மொபைல் போன் வாடிக்கை யாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, தனியார் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் கூறியதாவது: மாதம் தோறும் பிரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களில் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிப்பதில் மட் டுமே, தனியார் மொபைல் போன் சேவை நிறுவனங்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றன. அதே வேளையில், வாடிக் கையா ளர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதிலோ அல் லது அவசியமற்ற விளம் பர சேவை கால்களை தடை செய்வதிலோ அக்கறை காட்டுவதில்லை. இப்படியொரு சேவை எமக்கு வேண்டாம் என, சேவை பிரிவில் புகார் தெரிவித்தாலும் ரத்து செய்ய மறுக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கான சேவையை அதிகரித்திருப்பது தொடர்பான தகவல்களை எஸ்.எம்.எஸ்., சாக அனுப்ப ஆட்சேபணை இல்லை. அதே வேளையில், "ரெக்கார் டேட் வாய்ஸ்'சில் கால் செய்து, தகவல்களை மணிக்கணக்கில் கூறும் போது, அவற்றை கேட்க நேரமிருப்பதில்லை. மேலும், டெலிமார்க்கெட் டிங் உள்ளிட்ட தனியாரின் விளம்பர நோக்கத்துக்கு தீனி போடுவதை, மொபைல் போன் சேவை நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் போன் எண்களை, தனி நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ வழங்கி, வீண் தொந்தரவுக்கு துணைபோவதை கைவிட வேண்டும். இவ்வாறு, வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களின் அதிருப்தி குறித்து, தனியார் மொபைல் போன் சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்கள், முகவரிகளை சம்மந்தமில்லாத தனி நபர்கள், நிறுவனங்களுக்கு அளிப்பதில்லை. குற்ற வழக்குகளில் புலன்விசாரணைக்கு அவசியம் என போலீசார் கோரும் போது, உரிய கடிதம் பெற்று அதன் பிறகே அளிக்கிறோம்; அதற்கும், பல வித கெடுபிடிகளை கையாளுகிறோம். வாடிக் கையாளர்களின் நலனை பாதிக்கும் செயலுக்கு நாங்கள் துணைபோவதில்லை. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்
No comments:
Post a Comment