நாட்டின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் 6.4 சதவீதம் சரிவடைந்தது.
தொடர்ந்து 4வது முறையாக இந்நிறுவனத்தின் நிகர லாபம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டாம் காலாண்டில் ரூ.3,852 கோடியாக உள்ளது ரிலையன்ஸ் நிகர லாபம். இதுவே கடந்த ஆண்டு ரூ.4,116 கோடியாக இருந்தது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்கான லாபம் பேரலுக்கு 13 டாலரிலிருந்து 6 டாலராகக் குறைந்து விட்டதே இந்த லாப வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் கேஜி 6 படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயு காரணமாக பெரிய நஷ்டத்திலிருந்து இந்த நிறுவனம் தப்பியிருப்பகதாகக் கூறப்படுகிறது.
ஜூலை - செப்டம்பர் 2009 வரையிலான காலாண்டில் மட்டும் ரிலையன்ஸின் மொத்த வர்த்தகம் ரூ.44,688 கோடி ஆகும். இது அடுத்த ஆண்டு இதே காலாண்டில் 4.8 சதவீதம் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த காலாண்டில் ரிலையன்ஸ் லாபம் குறைந்ததே எதிர்பார்க்கப்பட்டதே என்றும், அதிகபட்ச வரிகள், தேய்மானம் போன்றவையும் இதற்கு முக்கியக் காரணம் என்றும் ஏசியன் மார்க்கெட் செக்யூரிட்டிஸ் தலைவர் கமலேஷ் கோடக் தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அனில் திருபாய் அம்பானி குழுமத் தலைவரும் அவர் தம்பியுமான அனில் அம்பானி ஆகியோருக்கிடையிலான கேஜி எரிவாயு தகராறின் முடிவும் ரிலையன்ஸின் ரிசல்டை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment