ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் அங்கமான ரிலையன்ஸ் தகவல் மையம் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் தளத்தில் செயல்படும் சாஃப்ட்வேரை அளிக்கும் சேவையை அளிக்க உள்ளது. இதன்படி மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேரைப் பயன்படுத்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சாஃப்ட்வேர் தீர்வுகள், பயன்பாட்டு முறைகள், சேவைகளை ரிலையன்ஸ் மூலம் பெறலாம். இத்தகைய சேவையை கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் ரிலையன்ஸ் வழங்குகிறது. இதன்படி இணையதளத்தில் புதிய தகவல்களை சேர்த்தல் (சர்வஸ் ஹோஸ்டிங்), தகவல்களை பதிவு செய்தல் (டேட்டா ஸ்டோரேஜ்), ஆவணக் காப்பகம் (ஆர்ச்சீவ்ஸ்) ஆகியன மட்டுமின்றி அன்றாட வணிக நடைமுறைகளுக்குத் தேவையான மின்ஞ்சல், இஆர்பி, தானியங்கி படிநிலை இயக்கம், ஆவண மேலாண்மை, தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடு, அறிக்கை தயார் செய்தல், அழிவிலிருந்து மீட்டல், ஃபயர்வால் சேவைகள் மற்றும் தானியங்கி பாதுகாப்பு மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த சேவை மையமாக இந்த மென்பொருள் தீர்வு அமைகிறது. மைக்ரோசாஃப்ட் தயாரித்து அளித்துள்ள தொழில்நுட்பத்தை எளிதில் பெறுவதற்கு ரிலையன்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் செலவு குறையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tuesday, November 3, 2009
ரிலையன்ஸ் மூலம் மைக்ரோசாஃப்ட் வசதி
Posted by pavbalane at 12:15:00 AM Labels: செய்திகள், தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment