சித்து பிளஸ் 2 பர்ஸ்ட் அட்டம்ப்ட் - இது பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு நாயகனாக நடித்திருக்கும் படம். படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக சாந்தினி என்ற கல்லூரி மாணவி நடித்திருக்கிறார். இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், சூட்டிங் ஸ்பாட்டில் சாந்தனுவால் தான் விழிபிதுங்கிய கதையை தனக்கே உரிய பாணியில் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். சாந்தனுவோ விவரமாய் பேசி ஆச்சர்யப்படுத்தினார். பாக்யராஜ் பேசுகையில், நான் அமிதாப்பச்சனையே வச்சு படம் எடுத்திட்டேன். ஆனால், இவனை வைச்சு எடுக்கறதுக்குள்ளே ஒரு வழியாகிட்டேன். எல்லாத்துலேயும் தலையிடுறான். கம்போசிங்கில் உட்கார்ந்தா அங்க ஒரு கரெக்ஷன். டயலாக் சொல்லிக் கொடுத்தா அதிலே இன்னும் ரெண்டு வரி சேர்த்து சொல்றான். கேமிராவை இங்க வக்கலாம்னு சொன்னா, இது வேணாம். அங்க வையுங்கிறான். சொந்த புள்ளைய வச்சு படம் எடுக்கறது பயங்கர கஷ்டம்ப்பா என்றார். அப்போது குறுக்கிட்ட சாந்தனு, யூத்துங்க சைக்காலஜி எனக்குதானே தெரியும்? அதைதான் நான் சொன்னேன். நான் சொன்ன கரெக்ஷனை யூனிட்ல இருக்கிறவங்களே ரசிச்சாங்க தெரியுமா? என்று சொன்னதுடன், அப்பா படம்ங்கிறதாலதான் நான் தலையிட்டேன். இதுவே வேற டைரக்டர்னா அவரு என்ன சொல்றாரோ, அதான். அப்படியே நடிச்சு கொடுத்திருவேன், என்றும் விவரமாய் பேசினார்.
Wednesday, November 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment