இன்டர்நெட் சாட்டிங் மூலம் பள்ளி மாணவிகளை மயக்கி தவறான செய்கையில் ஈடுபட்ட கணவனை, பள்ளி மாணவியைப் போல நடித்து போலீசில் சிக்க வைத்துள்ளார் அவரது மனைவி. லண்டனை சேர்ந்தவர் செரில். இவருக்கு வயது 61.
இவரது கணவர் டேவிட். வயது 68. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 2 குழந்தைகள் உள்ளனர். தன் கணவர் இந்த வயதிலும் இன்டர்நெட் சாட்டிங் மூலம் பள்ளி மாணவிகளிடம் பேசி மயக்கி, செக்ஸுக்கு அழைப்பதை ஒரு நாள் கண்டறிந்தார் செரில். ஒரு நாள் டேவிட் வெளியில் சென்றிருந்தார். அப்போது, வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில், சாட்டிங் ரூமிலிருந்து ஒரு மெசேஜ் பிளிங்க் ஆகிக் கொண்டிருந்தது. அதில், தவறான நோக்கத்துடன் ஒரு பள்ளி மாணவிக்கு டேவிட் அழைப்பு விடுத்திருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் செரில். எனினும், அதைக் காட்டிக் கொள்ளாமல், வீட்டில் உள்ள இன்னொரு அறையில் புதிய கம்ப்யூட்டரை வாங்கி வைத்தார். அந்த கம்ப்யூட்டரிலிருந்து, 14 வயது பள்ளி மாணவி போல நடித்து கணவருடன் சாட்டிங் செய்தார். மனைவிதான் சாட்டிங்கில் இருக்கிறார் எனத் தெரியாத டேவிட், ஜொள்ளு விட்டார். தனியாக சந்திக்க வரும்படி அழைத்தார். உடனே இதுகுறித்து செரில் போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.அவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். செரில் கொடுத்த புகாரின் பேரில் டேவிட்டை கைது செய்துள்ளோம். அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறோம். கார்க்கி என்ற புனைப் பெயரில் அவர் பள்ளி சிறுமிகளுடன் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
18 வயதுக்கு குறைந்த சிறுமிகளுடன் தவறான நோக்கத்துடன் பேசுவது, சட்டப்படி பயங்கரமான குற்றம் என இந்த வழக்கில் வாதாடி வரும் மார்ட்டின் கெல்லி என்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment