ஏர்டெல் நிறுவனம் புதிதாக தற்பொழுது இணையதள வடிவமைப்பு சேவையை துவங்கியுள்ளது. இதன்மூலம் தனது அகண்ட அலைவரிசை பயன்பாட்டாளர்களுக்கு சிறிய வணிகரீதியான இணையதள சேவையை எளிமையான WYSIWG தொகுப்பி (Editor) மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. இச்சேவை தற்பொழுது தனது அகண்ட அலைவரிசை சேவைக்காக பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்க முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது டி.எஸ்.எல். பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி இச்சேவையை பெறமுடியும்.
இச்சேவையில் ஐந்து பக்கங்கள் கொண்ட இணையதளம் முதற்கொண்டு அளவில்லா பக்கங்கள் கொண்ட இணையதளம் வரை மூன்று வகையான திட்டங்கள் உள்ளது. இது நிரந்தர தொகை மற்றும் மாத சந்தாவாகவும் வழங்கப்படுகிறது.
பயன்கள்:
- உபயோகிக்க எளிது. இணையதளத்தை எளிமையான மூன்று வழிகளில் முன்வடிவு (Template) மூலம் எளிதாக உருவக்க முடியும்.
- இணையதள வர்த்தகம் செய்வது, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக செய்வதற்கு எளைமையன வழிமுறைகளை கொண்டுள்ளது.
- இணையதள போக்குவரத்தை கண்கானிக்க எளிதானது
- இணையதள வடிவமைப்பு, களப்பெயர் பதிவு, போன்றவை அனைத்தும் ஒரே சேவையில் கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு http://www.amitbhawani.com/blog/develop-new-site-airtel-website-builder/
Good
ReplyDeleteBut what abt the service