சீன செல்போன்களுக்கு அசல் ஐஎம்இஐ எண் பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகு பெறப்படும் எண்கள் சில நாட்களில் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு இணைப்பை ரத்து செய்ய போன் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டது.
அதற்கான காலக்கெடு கடந்த 30ம் தேதி முடிந்தது. அதற்கு முன் சில மாதங்களாக சீன செல்போன்களுக்கு அசலான ஐஎம்இஐ எண்ணைப் பெற செல்போன் நிறுவனங்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வசதியும் கடந்த 30ம் தேதியோடு முடிந்த நிலையில், சில நிறுவனங்கள் ரூ.300 முதல் ரூ.500 வரை பெற்றுக் கொண்டு தொடர்ந்து ஐஎம்இஐ எண் அளித்து வருகின்றன.
நிபுணர் ஒருவர் கூறுகையில், காலக்கெடு முடிந்த பிறகு ஐஎம்இஐ எண் அளிப்பது சட்ட விரோதம். இப்போது பெறப்படும் எண்களுக்கு செல்போன் நிறுவனங்கள் சங்கம் பொறுப்பேற்காது. அவை சில நாட்களில் ரத்தாகி விடும் என்றார்.
இன்னிலையில் ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் தங்களது தயாரிப்பில் உள்ள ஐஎம்இஐ எண் நம்பகமானதுதான் என தமது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் உறுதி அளித்துள்ளது.
மேலும் ஸ்பைஸ் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அருகில் உள்ள விநியோகஸ்தரிடம் சென்று இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
--தினகரன்
நண்பரே, ஏற்கெனவே சமீபத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து எண்களுமே போலியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த மக்கள் அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் இன்னும் அறியாமையிலேயே இருக்கின்றனர். ஏனென்றால், இந்த எண்கள் உண்மையானவை என்றால் சீன, கொரிய மொபைல் போன்கள் வாங்கும்போதே அல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? இந்த மக்கள் என்றுதான் திருந்துவார்களோ? அதே போல் சீன, கொரிய மொபைல்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக விற்பனைக்கு வந்தவை என்று தெரிந்துமே இப்படி இருக்கிறார்கள். நாம் என்ன செய்ய?
ReplyDeleteஇதற்கு முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே காரணம். இவ்வகையான போன்களை இறக்குமதி செய்ய மற்றும் விற்பனை செய்ய அனுமதித்தது யார்?
ReplyDelete