பெங்களூரு: விப்ரோ நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் 21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் காலாண்டுகளில் இந்நிறுவனத்தின் லாபம் இன்னும் அதிகரிக்கும் என்றும் நிறைய புதிய அவுட்ஸோர்ஸிங் ஒப்பந்தங்களைப் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் விப்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
டிசிஎஸ், இன்போஸிஸ் நிறுவனங்களுக்கு அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனம் விப்ரோ. இதன் மொத்த வருமானம் இந்த காலாண்டில் மட்டும் 6 சதவிகிதம் உயர்ந்து ரூ.69000 கோடிகளாக உள்ளது. 37 புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.
சிட்டி குரூப், சிஸ்கோ, ஜிஎம் மற்றும் க்ரெடிட் சூஸே ஆகிய நிறுவனங்களிடமிருந்து மட்டும் நிகர லாபத்தில் ரூ.10041 கோடியைப் பெற்றுள்ளது விப்ரோ.
வரும் நாட்களில் மேலும் நிலையான வளர்ச்சி மற்றும் தேவை அதிகரிக்கும் சூழல் உருவாகும் என்று நம்புவதாக விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment