Wednesday, October 28, 2009

www.arusuvai.com இணையத்தள அறிமுகம்



உலகையே ஒட்டுமொத்தமாய் இணைக்கும் இணையம் என்கின்ற இன்டர்நெட், நவீன உலகின் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு ஊடகம் ஆகிவிட்டது. இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகின்றது என்றாலும், இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி விகிதம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒரு காரணம்

மொழிப் பிரச்சனை - எல்லோருக்கும் ஆங்கில அறிவு இல்லாமை.
இணையத்தின் பயன்களை அனுபவிக்க எல்லோரும் ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டும் என்பது நகைப்புக்கு உரியது. மிகக் குறைந்த அளவு மக்களே பேசக்கூடிய பல உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் உள்ளன. ஆனால், ஏறக்குறைய ஏழு கோடி மக்கள் பேசக்கூடிய தமிழ் மொழியில் அமைக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள் விரல் விட்டு எண்ணிவிடும் அளவிலேயே இன்னும் இருக்கின்றது.

இதற்கும் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தற்போதைய சூழல், தொழில்நுட்பம் எல்லாம், தமிழ் இணையத்தளங்கள் உருவாக்க சாதகமாய் உள்ளன. இணையத்தில் எல்லாம் கிடைக்கும் என்கின்ற இன்றைய நிலை, இணையத்தில் தமிழில் எல்லாம் கிடைக்கும் என்று மாறவேண்டும். இணையத்தில் பல்வேறு மொழிகளில் கிடைக்கும் பல்வேறு தகவல்களும் தமிழாக்கம் செய்யப்பட்டு, தமிழ் மக்களைச் சென்று அடைய வேண்டும்


இதன் பொருட்டு, முழுக்க முழுக்க உணவு சம்பந்தமான தகவல்களைத் தர இந்த அறுசுவை.com என்கின்ற இணையத்தளம் உருவாக்கப்படுகின்றது. உணவு சம்பந்தமாக இந்ததளத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து தகவல்களையும் முழுமையான அளவிற்கு தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இது போன்ற ஒரு இணையத்தளத்தினை ஆரம்பித்து நடத்த சென்னை போன்ற நகரங்களில்தான் இருக்க வேண்டும் என்ற நிலை சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்து இருக்கலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் மலிந்து, பெருகி பட்டித் தொட்டி எங்கும் புரையோடிவிட்ட இந்த காலகட்டத்தில், அது அவசியம் இல்லை என்பதனை நிரூபிக்கும் வண்ணம், இந்த இணையத்தளமானது பெரிய நகரமும் அல்லாத, சிறிய கிராமமும் அல்லாத நாகப்பட்டினம் சிறுநகரில் இருந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதுபோன்ற இணையத்தளங்கள் இனிவரும் காலங்களில், சிறு சிறு கிராமங்களில் இருந்தும் தோன்றி வளர இது ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பது இதன் உள்நோக்கம்.

ஏதோ எனக்கு தெரிந்த தளத்தை சொல்ல வேண்டும் என்று தோன்றியது 
------  வாருங்கள் சென்று உணவருந்தலாம் 

1 comment:

  1. Please move your tech postings to a separate blog so that it will be easy for ranking

    ReplyDelete

Related Posts with Thumbnails