செல்போன் கட்டணங்களைக் குறைப்பதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியில் அரசுத் துறை நிறுவனங்களும் இறங்கி, தாங்களும் தனியார் நிறுவனங்களுக்கு சளைத்தவை அல்ல என்று கட்டணக் குறைப்பை வெளியிட்டுள்ளது. உண்மையில் இதனால் யாருக்குப் பயன்?
- ÷ஒரு விநாடிக்கு என்ற அடிப்படையில் கட்டணம் குறைக்கப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் லாபம் கிடைத்ததா என்றால் அதற்கு விடை யாருக்குமே தெரியாது என்றுதான் கூற வேண்டும்.
- ÷÷ஒரு காலத்தில் அழைப்புகள் வந்தாலே செல்போன் கட்டணம் என்றிருந்த நிலை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. பேசப்பேச உங்களுக்கு சலுகை என்று நிறுவனங்கள் அறிவிக்கும் நிலை பரவலாக அதிகரித்துள்ளது.
- ÷கட்டணக் குறைப்பை மட்டுமே நிறுவனங்கள் பரவலாக விளம்பரப்படுத்துகின்றன. அதையேதான் முன்னிலைப் படுத்துகின்றன. ஆனால் அவை அளிக்கும் சேவை குறித்து எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை.
- ÷பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்துள்ள அனைத்து கட்டணக் குறைப்பும் குறிப்பிட்ட கால வரையறைதான் என்பது பலருக்கும் தெரியாது. அதன்பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு விலை உயர்த்தப்படும் என்பது எழுதப்படாத அல்லது கண்ணுக்குத் தெரியாத வகையில் விளம்பரப்படுத்தப்பட்ட சட்டமாக உள்ளது.
- ÷சேவை அளிக்கும் நிறுவனத்தின் செல்போன் வைத்திருப்பவர்களுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே இந்தச் சலுகை. பிற செல்போன் நிறுவன செல்போனில் தொடர்பு கொண்டால் கூடுதல் கட்டணம் என்பதை பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவிப்பதே இல்லை.
- ÷இதேபோல எஸ்டிடி அழைப்புகளுக்கும் இந்தச் சலுகை அளிப்பதாக பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் இதுவும் குறிப்பிட்ட காலம் வரைதான் என்பது அறிவிக்கப்படாத ஒன்றாக உள்ளது.
- ÷எஸ்டிடி அழைப்புகளுக்கு ஒரு விநாடிக்கு ஒரு பைசா கட்டணம் முதல் 450 நிமிஷங்களுக்கு மட்டும்தான் என்பது எத்தனை வாடிக்கையாளர்களுக்குத் தெரியும். அதன்பின்னர் வழக்கம்போல ஒரு விநாடிக்கு 2 காசு வீதம் வசூலிக்கப்படும். பில் வரும்போதுதான் வாடிக்கையாளருக்கு இந்த விவரம் தெரியும். இன்னும் சில பகுதிகளில் முதல் 15 நிமிஷத்துக்குத்தான் விநாடிக்கு ஒரு காசு என்ற அடிப்படையில் கட்டணமும் 15 நிமிஷத்துக்குப் பிறகு விநாடிக்கு 2 காசும் வசூலிக்கப்படுகிறது. இதை பல நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன. ஆனால் வாடிக்கையாளர்கள் இதைப்பற்றி அறியாமல், வழக்கம்போல பேசிக்கொண்டேயிருக்கின்றனர்.
- ÷விநாடி அடிப்படையில் கட்டணம் என்று அறிவிப்பு வெளியிட்டதோடு அதில் உள்ள நிபந்தனைகள் அது எத்தனைக் காலம் வரை அமலில் இருக்கும் என்ற விவரத்தையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொண்டு அதன்பிறகு இந்த முறைக்கு மாறுவதில் பயன் இருக்கும்.
- ÷குறிப்பிட்ட நிறுவனம் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பு எந்தெந்த பிரிவுகளுக்குப் பொருந்தும் என்றும் ரோமிங் கட்டணம் எவ்வளவு என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் எஸ்டிடி கட்டணம் எவ்வளவு காலத்துக்குப் பொருந்தும். அதன்பிறகு எவ்வளவு கட்டணம் என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் தேர்வு செய்ய வேண்டும்.
- ÷தற்போது செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் திரைப்படப் பாடலை காலர் டோன் மற்றும் ரிங் டோனாக வைப்பதற்கான வசதியை அளிக்கின்றன. இதற்கு அவை வசூலிக்கும் கட்டணத்தைத் தெரிந்து கொண்ட பிறகு அதைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம். இல்லையெனில் நீங்கள் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளராக இருந்தால் உங்களது பில் எகிறிவிடும். பிரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்தால் உங்களது ரீசார்ஜ் கட்டணம் நீங்கள் பேசாமலேயே கரைந்து போயிருக்கும். இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விளம்பரங்களை நம்பி பேசிக் கொண்டிருந்தால் பில் வரும்போது வருத்தப்பட வேண்டியிருக்கும்.
நல்லதொரு விழிப்புணர்ச்சி கட்டுரை . நன்றி
ReplyDelete