பாகிஸ்தானில் இருந்து செல்போனில் வரும் மிஸ்டு கால்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி வாடிக்கையாளர்களை வோடபோன், ஏர்டெல் செல்போன் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
சர்வதேச போன் அடையாள எண் +92ல் பாகிஸ்தானைச் சேர்ந்தது. இந்த எண்ணுடன் பல வாடிக்கையாளர் களுக்கு மிஸ்டு கால்கள் வருவதாக தகவல் வந்துள்ளது. வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது வோடபோன். எனவே, +92 என்ற எண்ணில் தொடங்கும் மிஸ்டு கால் வந்தால் மீண்டும் அழைக்க வேண்டாம். அழைப்பாக வந்தாலும் தனிப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டாம்.
லாட்டரியில் பல கோடி பரிசு விழுந்ததாக எஸ்எம்எஸ், மிஸ்டு கால் மூலம் பலருக்கு பாகிஸ்தானில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. பரிசைப் பெற தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. அதுபோன்ற அழைப்புகள், எஸ்எம்எஸ்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். +92 என்பதை அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
பாகிஸ்தான் விஷமிகள் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவது முதல்முறையல்ல.
ஒரு மாதம் முன்புதான் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நுகர்வோர் சேவைப் பிரிவில் இருந்து அழைப்பதாக கூறி மோசடி நடந்தது. இதுபற்றி புகார் வந்ததும் வாடிக்கையாளர்களை ஏர்டெல்லும் எச்சரித்து இருந்தது.