பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரோமிங் கட்டணம் 60 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், இந்திய செல்போன் வாடிக்கையாளர்களில் 23 சதவீதத்திற்கும் மேற்பட்டோரைக் கொண்டுள்ளது.
தற்போது செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும் ஏர் டெல் தரப்பிலிருந்து பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் ரோமிங் கட்டணத்தில் 60 சதவீதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது ஏர்டெல்
Sunday, November 22, 2009
ரோமிங் கட்டணத்தில் 60 சதவீதத்தைக் குறைத்தது ஏர்டெல்
Posted by pavbalane at 4:50:00 PM Labels: செய்திகள், வர்த்தகம் 0 commentsFriday, November 20, 2009
ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ள மெகா கோடீஸ்வரர்கள்
Posted by pavbalane at 9:36:00 AM Labels: செய்திகள் 0 commentsஇந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 2 மடங்காக உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.
இந்தியாவின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் ஆசியா பொருளாதார இதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி. இது இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்காகும். அதாவது, 25 சதவீதம்.
கடந்த ஆண்டின் போர்ப்ஸ் பட்டியலின்படி, ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. இப்போது அது 54 ஆக உயர்ந்துள்ளது. இது 100 சதவீதம் அதிகம். கடந்த சில மாதங்களில் பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதும், பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக நீடிப்பதும் புதிய பணக்காரர்கள் உருவாக காரணமாக அமைந்தது.
இதுபற்றி போர்ப்ஸ் ஏசியா ஆசிரியர் நஸ்ரீன் கர்மாலி கூறுகையில், "இந்திய கோடீஸ்வரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான நாட்கள் திரும்பியுள்ளன. இந்த ஆண்டு பட்டியலில் புதுமுகங்கள் சேர்ந்திருப்பது, இந்திய பங்குச் சந்தையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கிறது" என்றார்.
உலகின் வேறெந்த நாடுகளையும் விட அதிக கோடீஸ்வரர்களை குறுகிய காலத்தில் உருவாக்கும் வளமும், வாய்ப்புகளும் இந்தியாவில் மட்டுமே உள்ளன. புதிய கோடீஸ்வரர்கள் எல்லா துறைகளில் இருந்தும் உருவாகி இருப்பதே இதற்கு சாட்சி என்றும் நஸ்ரீன் கூறினார்.
போர்ப்ஸ் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து இந்த ஆண்டும் நாட்டின் முதல் பணக்காரராக நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி. இங்கிலாந்து வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல், ரூ.1.41 லட்சம் கோடியுடன் 2வது இடத்தில் உள்ளார். முகேஷின் தம்பி அனில் அம்பானி ரூ.82,500 கோடி சொத்துடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
சென்னை அலுவலகத்தை மூடுகிறது சோனி எரிக்ஸன்
Posted by pavbalane at 9:33:00 AM Labels: செய்திகள் 0 commentsஉலகில் உள்ள தனது சில முக்கிய கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது சோனி எரிக்ஸன் நிறுவனம். இதன் மூலம் 2000 பணியாளர்களைக் குறைக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கிளையும் அடங்கும். இதன் மூலம் சென்னையில் மட்டும் 420 பேர் பணியிழப்புக்கு உள்ளாகின்றனர்.
முக்கோண ஆராய்ச்சிப் பூங்கா - Research Triangle Park - எனும் பெயரில் உலகில் சில முக்கிய இடங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தியிருந்தது சோனி எரிக்ஸன்.
இப்போதைய நிதி நெருக்கடியான சூழலில் செலவுக் குறைப்பே பிரதானம் என்பதால், தனது முக்கிய கிளைகள் சிலவற்றை பிற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கிறது சோனி.
அதன்படி வட அமெரிக்காவிலிருந்த சில அலுவலகங்களை மொத்தமாக அட்லாண்டா நகருக்கு மாற்றியுள்ளது. இன்னும் சிலவற்றை கலிபோர்னியாவிலுள்ள ரெட்வுட் ஷோர்ஸ் பகுதிக்கு மாற்றிவிட்டது.
இந்தியாவில் சென்னையில் இருந்த சோனி எரிக்ஸன் அலுவலகம் மூடப்படுகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ள லுண்ட் நகருக்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளால் சோனி எரிக்ஸன் நிறுவனத்தில் உள்ள 2000 பணியாளர்கள் வேலை இழக்கிறார்கள். வரும் 2010 ஆண்டு மூன்றாவது காலாண்டுக்குள் இந்த செலவுக்குறைப்பு நடவடிக்கை முடிந்துவிடுமாம்.
சென்னை அலுவலகம் மூடப்படுவதால் உள்ளூரில் 420 தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள்.
3 ஜி சேவை... நாளை முதல் தமிழகத்தில்
Posted by pavbalane at 9:30:00 AM Labels: செய்திகள், வர்த்தகம் 0 commentsசென்னையில் நாளை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஜி மொபைல் சேவை அறிமுகமாகிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வீடியோ கான்பரன்ஸிங் உள்ள பல நவீன வசதிகளை அளிக்கும் அடுத்த தலைமுறைக்கான மொபைல் சேவையை கடந்த பிப்ரவரி மாதமே அறிமுகப்படுத்தியது பிஎஸ்என்எல்.
ஆனால் இந்த திட்டம் வட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதுகுறித்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் விவரம் கேட்டும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்களுக்குத் தெரியாது என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த திட்டத்தை சென்னையில் நாளை முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கான தொடக்க விழா அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலகத்தில் நடக்கிறது.
இந்த 3ஜி தொழில் நுட்பம் மூலம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு தவிர இன்டர் நெட், டெலிவிஷன் நிகழ்ச்சிகள், திரைப்படம் போன்ற பல வசதிகளை அனுபவிக்க முடியும்.
இந்த 3ஜி தொழில் நுட்ப வசதியை தற்போதுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். இதற்காக அவர்கள் புதிய இணைப்பு எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.
பி.எஸ்.என்.எல். பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.120 ரீசார்ஜ் செய்தும், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தியும் 3ஜி தொழில் நுட்ப வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் பி.எஸ். என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் லோக்கலில் பேச நிமிடத்திற்கு ரூ.1-ம், எஸ்.டி.டி பேச ரூ.1.50-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக லோக்கலுக்கு நிமிடத்திற்கு ரூ.30 பைசா, எஸ்.டி.டி.க்கு ரூ.50 பைசாவும் இப்போதைக்கு குறைக்கப்படுகிறது. புதிய கட்டண திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
Wednesday, November 18, 2009
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு புற்று நோய்
Posted by pavbalane at 9:58:00 AM Labels: செய்திகள், தொழில்நுட்பம் 0 commentsமைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸுடன் இணைந்து உருவாக்கியவரான பால் ஆலனுக்கு புற்று நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பால் ஆலனுக்கு லிம்போமா என்ற வகை புற்று நோய் தாக்கியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் தொடர்பான ஹாட்கின்ஸ் நோய் அவரைத் தாக்கியது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார் ஆலன். தற்போது லிம்போமா புற்றுநோய் அவரைத் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
56 வயதாகும் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது அவரது உல்கான் நிறுவன இணையதளத்தில், இந்த மாதத் தொடக்கத்தில் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. தற்போது கீமோதெரபி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்கான் நிறுவன தலைமை செயலதிகாரியும், சகோதரியுமான ஜோடி ஆலன் கூறுகையில், லிம்போமாவின் பொது வகையான பி செல் லிம்போமா ஆலனை தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
இது பால் ஆலன் குடும்பத்திற்கு கஷ்டமான செய்தியாக வந்துள்ளது. இருப்பினும் பால் முன்பு ஹாட்கின்ஸ் நோயை வென்றவர். எனவே இதையும் அவர் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
பால் ஆலன் தற்போது நன்றாக உள்ளார். தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்றார்.
70களில் பில் கேட்ஸுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர் பால் ஆலன். மைக்ரோசாப்ட்
கடந்த செப்டம்பர் மாதம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 400 அமெரிக்க பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்தைப் பிடித்தார் பாலன் ஆலன். அவரது சொத்து மதிப்பு 11.5 பில்லியன் டாலர்களாகும்.
பட்டாசுத் தொழிலில் உலக சந்தையில் போட்டியிட தமிழகம் முயற்சி
Posted by pavbalane at 9:57:00 AM Labels: செய்திகள், வர்த்தகம் 0 commentsஇந்தியாவில் பட்டாசுத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு , இத்தொழிலில் உலகளவில் போட்டிபோடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
முதல்கட்டமாக இதற்கான விரிவான சர்வே ஒன்றை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சர்வேயின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
சீனாவில் கூட பட்டாசு தொழிலுக்கென சிறப்பு பொருளாதார மண்டலம் இல்லை. ஆனால், தமிழகத்தில் தேவைப்பட்டால் இதற்கென சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும் அரசு தயாராக இருப்பதாக அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பட்டாசுத் தொழிலின் மையமாக கருதப்படுவது சிவகாசியாகும். இங்கு சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்டுகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக அறிந்து, தயாரிப்பு திறனை கணக்கிட்டு அதற்கு தேவையான நிதி மற்றும் இதர ஆதரவையும் வழங்க அரசு தயாராகி வருகிறது.
சர்வேயின் அடிப்படையில், பட்டாசுத் தொழிலுக்கென தனி தொழிற்பேட்டை அமைக்கலாமா அல்லது சிறப்பு பொருளாதார மண்டலமே அமைக்கலாமா என்பது குறித்து அரசு முடிவு செய்யும்.
இதுகுறி்த்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிஜிதாமஸ் வைத்தியன் கூறுகையில், 'பட்டாசுத் துறையில் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் தேவை அதிகரிக்கிறது. பட்டாசு தயாரிப்பில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவுடன் ஒப்பிடும் போது, நம்முடைய உற்பத்திச் செலவு கணிசமான அளவு அதிகமாக உள்ளது.
எனவே, உலக சந்தையை எதிர்கொள்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனபதை அறிய ஆய்வு நடத்தப்பட உள்ளது. பட்டாசு ஏற்றமதியில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உண்டு. அவற்றை எதி்ர்கொள்வது குறித்தும் ஆராயப்படும்' என்றார்.
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: ரூ.13 ஆயிரத்தை நெருங்குகிறது
Posted by pavbalane at 9:56:00 AM Labels: செய்திகள், வர்த்தகம் 0 commentsநவ. 17: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி பவுன் விலை ரூ.11,920 ஆக இருந்தது. இது நவம்பர் 2-ம் தேதி ரூ.12,104 ஆக அதிகரித்தது. இதன் மூலம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பவுன் விலை ரூ.12 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இப்போது ரூ.13 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.1,605. திங்கள்கிழமை விலை: ஒரு பவுன் ரூ.12,784. ஒரு கிராம் ரூ.1,598. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில மாதங்களாக வெகுவாக அதிகரித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது என்கின்றனர் வியாபாரிகள். முதல் முறையாக, ஒரே மாதத்தில் பவுனுக்கு ரூ.900 அளவுக்கு உயர்வு ஏற்பட்டிருப்பதால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)