Monday, December 21, 2009

பிரிட்டனில் வரி ஏய்ப்பு செய்ததாக கூகுள் மீது புகார்

0 comments

வரி ஏய்ப்பு பிரச்சினையில் சிக்கியுள்ளது கூகுள் நிறுவனம். சமீபத்திய செய்திகளின்படி இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் சம்பாதித்த 1.6 பில்லியன் பவுண்டுகளுக்கு (1 பவுண்ட் = ரூ 76) வரி செலுத்தவில்லையாம்.

இதுகுறித்த செய்தியை சண்டே டைம்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள்.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் கூறியுள்ளது டைம்ஸ். பிரிட்டிஷ் வங்கிகளில் உள்ள தனது வைப்புத் தொகைக்கு கிடைத்த வட்டிக்கு செலுத்திய வரிதானாம் இது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் லிபரல் டெமாக்கரடிக் கட்சியின் துணைத் தலைவர் வின்ஸ் கேபிள், "கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். சம்பாதித்த பணத்துக்கு நேர்மையாக பணம் செலுத்துவதில் என்ன தயக்கம்? தனது சமூகப் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது கூகுள்" என்றார்.

"நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த நேரத்தில் அதிக வருவாய் ஈட்டும் கூகுள் போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதால், அந்த வரிச் சுமை சாதாரண மக்களின் தொண்டையில் கத்தியாய் நிற்கும்" என்றும் கேபிள் கூறியுள்ளார்.

காப்புரிமை மீறிய கூகுளுக்கு தினமும் ரூ.6.7 லட்சம் அபராதம்

0 comments
இணைய தளத்தில் வெளியிட காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்த கூகுள் நிறுவனம், விதிமீறலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.6.72 லட்சம் அபராதம் செலுத்த பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

உலகின் முன்னணி இணைய தள சேவை நிறுவனம் கூகுள். அது உலகம் முழுவதும் அரிய புத்தகங்களை ஸ்கேன் செய்து அனைவரும் இணைய தளத்தில் படிக்கும் வசதி ஏற்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. ‘டிஜிட்டல் புக்’ என்ற பெயரிலான அந்த வசதிக்காக இதுவரை 1 லட்சம் பிரெஞ்சு மொழி புத்தகங்களை ஸ்கேன் செய்துள்ளது.

காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் வெளியிடக் கூடாது என்று கூகுளுக்கு பல பதிப்பகங்கள், நூலாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி புத்தகங்களை ஸ்கேன் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வந்தது.

இதை எதிர்த்து பிரான்ஸ் பதிப்பாளர் லா மார்டினர், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த பாரீஸ் நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. ‘டிஜிட்டல் புக் வசதிக்காக காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்தது சட்ட மீறல். அந்தப் பணியில் ஈடுபட்ட நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.6.72 லட்சத்தை கூகுள் அபராதமாக செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வழக்கு தொடர்ந்த லா மார்டினருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் வழக்கு செலவு சேர்த்து ரூ.2.02 கோடி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றி கூகுள் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘தீர்ப்பை எதிர்த்து நிறுவனம் அப்பீல் செய்யும்’ என்றார்.

இதேபோல கூகுளின் ‘டிஜிட்டல் புக்’ வசதிக்கு அமெரிக்கா, ஜெர்மனி காப்புரிமை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் இடம்பெறச் செய்வதை கூகுள் கைவிடத் தவறினால் அவர்களும் வழக்கு தொடர்ந்து பல கோடி இழப்பீடு கோர திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த தீர்ப்பு குறித்து பிரான்ஸ் பதிப்பக உரிமையாளர் சங்க அதிகாரி கூறுகையில், ‘‘இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. என்ன நினைத்தாலும் செய்யலாம் என்று உலகின் ராஜாவாக தன்னை நினைத்த கூகுளுக்கு சரியான பாடம் இது’’ என்றார்.

எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்

0 comments
மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும்.




ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Sunday, December 20, 2009

200 வைரங்கள் பதித்த செல்போன் ரூ.15 கோடி

0 comments

உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போனை இங்கிலாந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 200 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட அதன் விலை ரூ.14.7 கோடி. லிவர்பூலைச் சேர்ந்த தங்க நிறுவனம் கோல்டு ஸ்டிரைக்கர் இன்டர்நேஷனல். அதன் ஆர்டரின் கீழ் ஸ்டாட் ஹியூஜஸ் என்ற நிறுவனம், உலகின் விலை உயர்ந்த செல்போனை தயாரித்துள்ளது. 3ஜி தொழில்நுட்பம் கொண்ட அந்த ஐபோனில் 200 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

முற்றிலும் 22 காரட் தங்கத்தில் தயாரானது. முன்பக்கத்தில் 136 வைரங்களும், 53 வைரங்களில் ஐபோன் நிறுவனமான ஆப்பிளின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. இந்த போனை தயாரிக்க 10 மாதங்கள் ஆகின. 7 கிலோ எடை கொண்ட உறுதியான கிரானைட்பேக்கிங்கில் அது விற்பனைக்கு அனுப்பப்பட்டது. கிரானைட் கற்களில் உலகின் மிகத் தரமானதாக காஷ்மீர் கோல்டு கிரானைட் கருதப்படுகிறது. அதில் இந்த பேக்கிங் செய்யப்பட்டுள்ளது.

Friday, December 18, 2009

இணைய உளாவியை குறிப்பு ஒட்டியாக மாற்றுதல்

0 comments



நீங்கள், உங்கள் வேலைகளை ஞாபகம் வைத்துக்கொள்ள சிறு தாள்களில் குறிப்பெழுதி உங்கள் மேசை மற்றும் கணினி திறையில் ஒட்டி வைப்பவரா?  அல்லது அனைத்தையும் ஒரு ஏட்டில் எழுதி வைப்பவரா அல்லது அவ்வேலைகளை செய்யும் மென்பொருளில் சேமிப்பவரா?  அப்படியானால் உங்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு புதிய குறிப்பு ஒட்டி (ஸ்டிக்கி நோட்ஸ்) இதோ.



நீங்கள் முழு நேரமும் இணையத்தில் இருப்பவர் (வேலை நிமித்தமோ அல்லது பொழுது கழிப்பதற்கோ) என்று வைத்துக்கொள்வோம்.  இதற்காக நீங்கள் சிரமம் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.   இது ஒரு எளிமையான, இணையத்துடன் கூடிய ஒரு சிறு குறிப்பு ஒட்டி.

இதற்கென நீங்கள் அந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும்என்ற கட்டாயம் இல்லை.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தொடர்பை சுட்டி (Sticky Screen) அங்கு தோன்றும் குறிப்புகளுக்கு பதில் உங்களுக்கு தேவையான குறிப்புகளை தட்டிக்கொள்ளவும். பிறகு அப்பக்கத்தை உங்கள் முகப்பு பக்கமாக சேமிக்கவும்.  அவ்வளவுதான் நீங்கள் ஒவ்வொறு முறை புதிய டேப் கிளிக் செய்யும் பொழுதெல்லாம் இந்த குறிப்புகள் உங்கள் திறையில் தெரியும்.













Thursday, December 17, 2009

வங்கதேச செல்போன் நிறுவனத்தை வாங்கும் பார்தி ஏர்டெல்

2 comments


பங்களாதேஷ் நாட்டின் நான்காவது பெரிய செல்போன் நிறுவனமான வாரிட் டெலிகாமை வாங்குகிறது இந்தியாவின் பார்தி ஏர்டெல்.

அபு தாபியைச் சேர்ந்த தாபி நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த வாரிட் மொபைல். இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பங்களாதேஷ் மொபைல் போன் மார்க்கெட்டில் நுழைகிறது பார்தி ஏர்டெல்.

வாரிட் டெலிகாமின் 70 சதவிகித பங்குகளை பார்திக்கு விற்க சம்மதித்துவிட்ட தாபி நிறுவனம், இதற்கு முறைப்படி பங்களைதேஷ் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது.

கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்களை ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பார்தி, படிப்படியாக 900 மில்லியன் டாலர் வரை பங்களாதேஷில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளது.

வாரிட் நிறுவனம் 2007-ல் பங்களாதேளஷில் கால்பதித்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக அந்நாட்டின் பெரிய செல்போன் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

பார்தி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவது, பங்களாதேஷ் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்று இந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் இப்போது 52 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

Wednesday, December 16, 2009

700 பேரை நீக்கும் டெல் நிறுவனம்

0 comments


கம்ப்யூட்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான டெல் நிறுவனம் தனது மலேஷிய கிளையில் 700 பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த கிளையில் 4,500 பணியாளர்கள் உள்ளனர். வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கான கம்ப்யூட்டர்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேட்டஸ்ட் பாம் டாப் (Palm top) இங்கு தயாரிக்கப்படுகின்றன.

உலகமெங்கும் இந்த நிறுவனத் தயாரிப்புகளுக்கு நல்ல தேவை இருந்தாலும், சமீப காலமாக டெல் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. சர்வதேச மந்தத்தை சமாளிக்க முடியாத நிலையில் பல செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியது.

நிலைமையைச் சமாளிக்க வரும் ஜூலைக்குள் 700 ஊழியர்களை நீக்கிவிடுவதாக அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல் நிறுவனத்தின் பினாங் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள். ஜனவரி தொடங்கி ஜூலைக்குள் இந்தப் பணி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் ஜாஸ்மின் பேகம் அறிவித்துள்ளார்.

மேலும் இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மட்டும் கம்ப்யூட்டர் தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

Related Posts with Thumbnails