15 இலக்க ரகசிய குறியீடு இல்லாத மொபைல் போன்களுக்கான இணைப்புகள் வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து துண்டிக்கப்படும் என இந்திய செல்லுலர் போன் சங்கம் தெரிவித்துள்ளது.
செல்போன்கள் திருட்டு போனால் அது யாரிடம் இருக்கிறது? என்பதைக் கண்டு பிடிக்க ஒரு சுலபமான வழி 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) எனப்படும் ரகசிய குறியீட்டு எண்கள்தான். மேலும் மொபைல் போன்களில் 'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) இருப்பதும் அவதியமாகும்.
ஆனால் சீனா தைவான், தாயாலாந்து, கொரியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்களில் இந்த நம்பர்கள் இருப்பதில்லை. இதனை தீவிரவாத சக்திகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதால், இத்தகைய மொபைல் கருவிகளை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்து, அவற்றின் இறக்குமதிக்கு தடையும் வித்துள்ளது.
இந்த ரகசிய எண்கள் இல்லாத செல்போன்களின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றும், தொலை தொடர்புத்துறை, இந்திய செலுலார் சங்கத்துக்கு தெரிவித்து உள்ளது.
இதன் படி ரகசிய குறியீடு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகளை, டிசம்பர் 1-ந் தேதி முதல் துண்டித்து விட, இந்திய செலுலார் சங்கம் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது. இதன்படி இந்தியாவில் துண்டிக்கப்படும் செல்போன்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
அவசியமான ஒன்று. பாதுகாப்பு கருதி இதனை செய்யும் அரசு மற்ற செல்போன்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ReplyDeleteஅவசியமான,அவரசமான ஒன்றுதான். ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையும். அரசியல்வாதிகளும், கையூட்டுவாங்கிக் கொண்டு புறவழியாக அனுமதி கொடுக்கும் அரசு அதிகாரிகளும் செய்த தவறு... குத்துதே... குடையுதே... என்றால்...எப்படி? சீனா மொபைல்களை வாங்கிய அப்பாவி பொதுமக்கள் பாவம்.
ReplyDeleteஅன்பன்... ஜிஆர்ஜி, புதுச்சேரி.
சீனா மொபைல்களை வாங்கிய அப்பாவி பொதுமக்கள் பாவம்.//
ReplyDeleteExactly