பேராண்மை ஹிட்! ஐங்கரன் பிலிம்சுக்கும் இது முதல் ஹிட்! சந்தோஷத்தை பட்டாசு வெடித்து கொண்டாடாத குறைதான். டைரக்டர் ஜனநாதன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், ஹீரோ ஜெயம் ரவி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
தொகுப்பாளர் ரொம்பவே ஷார்ப் ஆன ஆள் போலிருக்கிறது. முன்பெல்லாம் கோட் சூட்டோட வருவார் அருண் பாண்டியன். அப்புறம் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போது பளபளப்பு குறைஞ்சு பேண்ட் சட்டைக்கு மாறிட்டார். நல்லவேளை, இந்த படம் ஹிட் ஆச்சு. அதுவும் கொஞ்ச நஞ்ச ஹிட் இல்லை. அவரு ராஜா டிரஸ்சே போடலாம். அந்தளவுக்கு ஹிட் என்றார். அருண் பாண்டியனின் பேச்சில் அநியாயத்திற்கு அழகு. “படத்திலே ஒரு டயலாக் வரும். இங்கிருக்கிற மேசை நாற்காலிகளில் உழைப்பை நீக்கிட்டா வெறும் மரம்தான் மிஞ்சும். இந்த சாக்பீஸ்லே உழைப்பை நீக்கிட்டா வெறும் சுண்ணாம்புதான் மிஞ்சும். இந்த கட்டிடத்திலிருந்து உழைப்பை நீக்கிட்டா வெறும் செங்கல்தான் மிஞ்சும் என்று. இந்த படத்திலிருந்து உழைப்பை நீக்கிட்டா வெறும் பணம்தான் மிஞ்சும்” என்றார்!
“இந்த படத்திலே நான் நடிக்கலே. படிச்சேன்” என்று படு ஸ்டைலாக பேச ஆரம்பித்தார் ஜெயம்ரவி. ஜனநாதன் சார் அவ்வளவு அறிவாளி. அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. அவரு பார்க்கதான் இப்படி இருக்கார். அவரது உலக ஞானம் எல்லையற்றது என்று பாராட்டியவர், இதுக்கு முன்னாடி என்னை பற்றிய பார்வை வேறாக இருந்தது. இந்த படத்திற்கு பிறகு அப்படியே வேறு மாதிரியாக மாறியிருக்கிறது. அதுக்கு காரணமான ஜனநாதன் சாருக்கு நன்றி என்றார்.
நல்ல பகிர்வு நண்பரே....
ReplyDeleteசரியாய் சொன்னீங்க
ReplyDeleteHai its cool buddy........
ReplyDelete