Thursday, October 29, 2009

ஃபேஸ்புக், ட்விட்டரால் 1.38 பில்லியன் பவுண்டுகள் இழப்பு


லண்டன்: இன்றைய டெக்னாலஜி உலகில், நண்பர்கள் எளிதில், எப்போதும் தொடர்பிலிருக்க ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.

ஆனால் உண்மையில் இவற்றால் நன்மை ஏதும் இருக்கிறதா என்றால்... இல்லை என்று உறுதியாக பதிலளிக்கிறது ஒரு சமீபத்திய செய்தி

இந்த நெட்வொர்க் தளங்களிலேயே பலர் அதிக நேரத்தை வீணடிப்பதால் பிரிட்டன் வர்த்தகத்தில் 1.38 பில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

வேலை நேரத்தில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பெரும்பாலான பணியாளர்கள் கவனத்தைச் சிதறவிடுவதாகவும், சராசரியாக வாரத்துக்கு 40 நிமிடங்களை இப்படி வீணடிப்பதாகவும் இந்த முடிவுகள் கூறுகின்றன.

அதுமட்டுமல்ல... அலுவலகத்தின் முக்கிய பிரச்சினை அல்லது ரகசியங்களை பல பணியாளர்கள் இந்த தளங்களில் கசிய விடுவதால் பல ஆபத்துக்கள் நேர்வதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மொத்தம் 1460 பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 84 சதவிகிதம் பேர், இந்த தளங்களைப் பயன்படுத்தக் கூடாது என தங்கள் முதலாளிகள் தடை விதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. யூட்யூப் தளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்களும், சீனர்களும். ஆனால் இவர்களால் யூட்யூப் தளத்துக்கு பைசா லாபம் இல்லை என்கிறது கூகிள். இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  2. சரியாய் சொன்னீங்க

    ReplyDelete

Related Posts with Thumbnails