Thursday, October 29, 2009

சன் டிவி லாபம் 20% அதிகரிப்பு

1 comments
2009 செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் சன் டிவி குழுமத்தின் லாபம் ரூ. 130.36 கோடியைத் தொட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட லாபத்தை விட 20 சதவீதம் அதிகமாகும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும்.

சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவ உள்ளன.

ரகசிய குறியீடு எண் இல்லாத செல்போன் இணைப்பு டிசம்பர் 1 முதல் துண்டிப்பு!

3 comments

15 இலக்க ரகசிய குறியீடு இல்லாத மொபைல் போன்களுக்கான இணைப்புகள் வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து துண்டிக்கப்படும் என இந்திய செல்லுலர் போன் சங்கம் தெரிவித்துள்ளது.

செல்போன்கள் திருட்டு போனால் அது யாரிடம் இருக்கிறது? என்பதைக் கண்டு பிடிக்க ஒரு சுலபமான வழி 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) எனப்படும் ரகசிய குறியீட்டு எண்கள்தான். மேலும் மொபைல் போன்களில் 'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) இருப்பதும் அவதியமாகும்.

ஆனால் சீனா தைவான், தாயாலாந்து, கொரியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்களில் இந்த நம்பர்கள் இருப்பதில்லை. இதனை தீவிரவாத சக்திகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதால், இத்தகைய மொபைல் கருவிகளை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்து, அவற்றின் இறக்குமதிக்கு தடையும் வித்துள்ளது.

இந்த ரகசிய எண்கள் இல்லாத செல்போன்களின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றும், தொலை தொடர்புத்துறை, இந்திய செலுலார் சங்கத்துக்கு தெரிவித்து உள்ளது.

இதன் படி ரகசிய குறியீடு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகளை, டிசம்பர் 1-ந் தேதி முதல் துண்டித்து விட, இந்திய செலுலார் சங்கம் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது. இதன்படி இந்தியாவில் துண்டிக்கப்படும் செல்போன்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

பணம்தான் மிஞ்சும்... பேராண்மை யூனிட் பெருமிதம்!

3 comments
பேராண்மை ஹிட்! ஐங்கரன் பிலிம்சுக்கும் இது முதல் ஹிட்! சந்தோஷத்தை பட்டாசு வெடித்து கொண்டாடாத குறைதான். டைரக்டர் ஜனநாதன், தயாரிப்பாளர் அருண் பாண்டியன், ஹீரோ ஜெயம் ரவி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

தொகுப்பாளர் ரொம்பவே ஷார்ப் ஆன ஆள் போலிருக்கிறது. முன்பெல்லாம் கோட் சூட்டோட வருவார் அருண் பாண்டியன். அப்புறம் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போது பளபளப்பு குறைஞ்சு பேண்ட் சட்டைக்கு மாறிட்டார். நல்லவேளை, இந்த படம் ஹிட் ஆச்சு. அதுவும் கொஞ்ச நஞ்ச ஹிட் இல்லை. அவரு ராஜா டிரஸ்சே போடலாம். அந்தளவுக்கு ஹிட் என்றார். அருண் பாண்டியனின் பேச்சில் அநியாயத்திற்கு அழகு. “படத்திலே ஒரு டயலாக் வரும். இங்கிருக்கிற மேசை நாற்காலிகளில் உழைப்பை நீக்கிட்டா வெறும் மரம்தான் மிஞ்சும். இந்த சாக்பீஸ்லே உழைப்பை நீக்கிட்டா வெறும் சுண்ணாம்புதான் மிஞ்சும். இந்த கட்டிடத்திலிருந்து உழைப்பை நீக்கிட்டா வெறும் செங்கல்தான் மிஞ்சும் என்று. இந்த படத்திலிருந்து உழைப்பை நீக்கிட்டா வெறும் பணம்தான் மிஞ்சும்” என்றார்!

“இந்த படத்திலே நான் நடிக்கலே. படிச்சேன்” என்று படு ஸ்டைலாக பேச ஆரம்பித்தார் ஜெயம்ரவி. ஜனநாதன் சார் அவ்வளவு அறிவாளி. அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. அவரு பார்க்கதான் இப்படி இருக்கார். அவரது உலக ஞானம் எல்லையற்றது என்று பாராட்டியவர், இதுக்கு முன்னாடி என்னை பற்றிய பார்வை வேறாக இருந்தது. இந்த படத்திற்கு பிறகு அப்படியே வேறு மாதிரியாக மாறியிருக்கிறது. அதுக்கு காரணமான ஜனநாதன் சாருக்கு நன்றி என்றார்.

ஃபேஸ்புக், ட்விட்டரால் 1.38 பில்லியன் பவுண்டுகள் இழப்பு

2 comments

லண்டன்: இன்றைய டெக்னாலஜி உலகில், நண்பர்கள் எளிதில், எப்போதும் தொடர்பிலிருக்க ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.

ஆனால் உண்மையில் இவற்றால் நன்மை ஏதும் இருக்கிறதா என்றால்... இல்லை என்று உறுதியாக பதிலளிக்கிறது ஒரு சமீபத்திய செய்தி

இந்த நெட்வொர்க் தளங்களிலேயே பலர் அதிக நேரத்தை வீணடிப்பதால் பிரிட்டன் வர்த்தகத்தில் 1.38 பில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

வேலை நேரத்தில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பெரும்பாலான பணியாளர்கள் கவனத்தைச் சிதறவிடுவதாகவும், சராசரியாக வாரத்துக்கு 40 நிமிடங்களை இப்படி வீணடிப்பதாகவும் இந்த முடிவுகள் கூறுகின்றன.

அதுமட்டுமல்ல... அலுவலகத்தின் முக்கிய பிரச்சினை அல்லது ரகசியங்களை பல பணியாளர்கள் இந்த தளங்களில் கசிய விடுவதால் பல ஆபத்துக்கள் நேர்வதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மொத்தம் 1460 பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 84 சதவிகிதம் பேர், இந்த தளங்களைப் பயன்படுத்தக் கூடாது என தங்கள் முதலாளிகள் தடை விதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இன்டர்நெட் பேனர் விளம்பரத்திற்கு 15 வயசு!

0 comments
இணையத் தளத்தில் உலகின் முதல் பேனர் விளம்பரம் வெளியாகி அக்டோபர் 27-டன்  15 வருடங்களாகி விட்டது.

1994ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி Hotwired.com என்ற இணையத் தளத்தில் வெளியான பேனர் விளம்பரமே, உலகின் முதல் டிஜிட்டல் விளம்பரமாகும்.

ஹாட்வைர்ட் இணையதளம் ஒரு டிஜிட்டல் வர்த்தக இணையத் தளமாகும். இதுவே உலகின் முதல் டிஜிட்டல் வர்த்தக இணையத் தளமும் கூட, வைர்ட் இதழின் இணையத் தளப் பதிப்பும் ஆகும்.

டிஜிட்டல் விளம்பரம் குறித்து பி அன்ட் ஜி நிறுவனத்தின் தலைவரான எட் அர்ட்ஸ்ட் 1994ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக விழிப்புணர்வுப் பேச்சை நிகழ்த்தினார். டிஜிட்டல் விளம்பரமே இனி வர்த்தக உலகின் புதிய எதிர்காலமாக இருக்கும். அதற்கு அனைவரும் மாற வேண்டும். இல்லாவிட்டால் தனிமைப்படுத்தப்படுவோம் என்று அவர் கூறினார்.

அவரது பேச்சைக் கேட்ட மெஸ்னர் வெட்ரே பெர்ஜர் மெக்நாமி ஸ்மாட்டரர் நிறுவனத்தின் தலைவரான பாப் ஸ்மிட்டரருக்கு புதிய உற்சாகம் பிறந்தது. இதையடுத்து ஒரு விளம்பரத்தை உருவாக்கும் பணியை முடுக்கி விட்டார் பாப்.

இன்டர்நெட்டில் விளம்பரம் என்பது அப்போது புதிது என்பதால் சும்மா போட்டு பார்ப்போம் என்ற எண்ணமே அப்போது பாப் மற்றும் அவரது குழுவினரிடம் இருந்தது.

பின்னர் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை இதில் பயன்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே சிலரை அணுகினர். அதன்படி தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.சி.ஐ, வோல்வோ நிறுவனம், கிளப்மெட், 1-800 கலெக்ட், ஏடி அன்ட் டி, ஜிமா ஆகியவை விளம்பரம் தர முன் வந்தன..

இந்த ஆறு நிறுவனங்களின் பெயர்களையும் வைத்து பேனர் விளம்பரம் தயாரிக்கப்பட்டது. அப்போது இருந்த வெப் பிரவுசர் மொசைக் (பின்னர் நெட்ஸ்கேப் எக்ஸ்புளோரர் வந்து மொசைக்கை விரட்டி விட்டது).

மேலும், இப்போது போல பிராட்பேண்ட்டும் கிடையாது. டயல் அப் மட்டுமே. அதிகபட்ச வேகமே 24.4 கேபிபிஎஸ் தான். அமெரிக்காவில் இன்டர்நெட் வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை அப்போது 20 லட்சம்தான்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த 6 நிறுவனங்களின் பெயர்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் பேனர் விளம்பரங்கள் இடம் பெற்றன. இன்டர்நெட்டில் இடம் பெற்ற உலகின் முதல் விளம்பரங்கள் என்ற பெருமையை இந்த ஆறு நிறுவனங்களின் பெயர்களும் பெற்றன.

இந்த பேனர் விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே சோதனை ரீதியாக வெளியிடப்பட்ட இந்த பேனர் விளம்பரங்கள், உலகின் முதல் டிஜிட்டல் விளம்பரம் ஒரு வழியாக வெற்றி பெற்றது- பின்னர் நடந்தது வரலாறு.

வோல்வோ நிறுவனம் இந்த விளம்பர வெற்றி யால் மகிழ்ச்சி அடைந்தது. இருப்பினும் விளம்பரத்தை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் தங்களை அணுகுவதை அது விரும்பவில்லை.

அதற்கு சுவாரஸ்யமான காரணம் இருந்தது- முதலில் ஆன்லைன் மூலம் தங்களை அணுகும் வாடிக்கையாளர்ளை எப்படி கையாளுவது என்பது குறித்து அதற்குத் தெரியாமல் இருந்தது.

2வது, சட்ட ரீதியான பிரச்சினைகள் வந்து விடுமோ என்ற குழப்பம் ஒரு பக்கம். இதனால் விளம்பரத்தை கிளிக் செய்து பார்க்கும்படியாக அதை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது வோலவோ.

எனவே வோல்வோ நிறுவனத்தின் லோகோ மற்றும் ஒரு வாகனத்தின் படம் 

இருப்பினும் அப்படியே விட்டால் நலமாக இருக்காது என்று எண்ணிய பாப் குழுவினர், வோல்வோ பேனரை கிளிக் செய்து உள்ளே போன பின்னர் ஒரு கொஸ்டினர் வருவது போல வடிவமைத்திருந்தனர். அதில் உங்களுக்கு எந்த வோல்வோ கார்  பிடிக்கும் என்ற கேள்வியைக் கேட்டிருந்தனர்.

இப்படி விளையாட்டு  போல ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரம் இன்று எப்படி உள்ளது?. இன்றைய டிஜிட்டல் விளம்பர வர்த்தகத்தின் மதிப்பு 24 பில்லியன் டாலர்களாம்!. மட்டுமே அந்த பேனர் விளம்பரத்தில் இடம் பெற்றதாம்.

---- Thatstamil

Related Posts with Thumbnails