Monday, November 30, 2009

எஸ்எம்எஸ் கட்டணங்கள் 99 சதவிகிதம் குறைப்பு!!

0 comments

எஸ்எம்எஸ் கட்டணங்கள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 1 பைசா மட்டுமே என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

மொபைல் சர்வீஸ் நிறுவனங்களில் அழைப்புக் கட்டணத்தை விட அதிக காஸ்ட்லியானதாக இருந்தது எஸ்எம்எஸ்தான். ஆனால் இந்த எஸ்எம்எஸ் அனுப்ப 1 KBக்கும் குறைந்த அலைவரிசை இருந்தாலே போதுமாம். இதற்கான கட்டணம் ஒரு பைசாவுக்கும் குறைவுதான். ஆனால் பல நிறுவனங்கள் இன்றைக்கும் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை எஸ்எம்எஸ் கட்டணமாக வசூலித்துக் கொண்டு வருகின்றன.

இந்த உண்மையை பத்திரிகைகள் சமீபத்தில் வெளிக் கொணர்ந்தன. இதனால் தொலைத் தொடர்பு ஆணையம் ட்ராய், 'பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எம்எஸ் கட்டணத்தை அதிகளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பது உண்மைதான். விரைவில் குறைத்துவிடுவோம்' என்று சமாளித்திருந்தது.

ஆனால் மக்களுக்கு உண்மை தெரிந்து கடும் கோபத்திலிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட ரிலையன்ஸ், நேற்று (29-11-2009) எஸ்எம்எஸ் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.

இந்த அறிவிப்பின்படி இனி 1 எஸ்எம்எஸ் 1 பைசா மட்டுமே. ஒரு நாள் முழுக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் ரூ. 1 செலுத்தினால் போதும். எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பித் தள்ளலாம். ஒரு மாதம் முழுக்க எல்லையில்லை எஸ்எம்எஸ் அனுப்ப ரூ 11 செலுத்தினால் போதுமாம்.

பார்தி ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோனும் இப்போது எஸ்எம்எஸ் கட்டண யுத்தத்தில் களமிறங்குகின்றன.

நோக்கியா சென்னை 3 ஜி மொபைல் தயாரிப்பு தீவிரம்!

0 comments

சென்னை மற்றும் தமிழகத்தில் 3 ஜி செல்போன் சேவை விரிவாக்கப்பட்டு வருவதையடுத்து, முன்னணி மொபைல் கருவி தயாரிப்பு நிறுவனங்கள் 3 ஜி வசதி கொண்ட மொபைல் தயாரிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

சென்னை அருகே பெரும் தொழிற்சாலைகளை அமைத்துள்ள நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் மற்றும் மோட்டாரோலா நிறுவனங்கள் இனி 3 ஜி மொபைலை அதிகம் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

நோக்கியாவின் புதிய ஆலை படப்பை அடுத்துள்ள ஒரகடத்தில் அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் 3 ஜி மொபைல் உற்பத்தி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த நிறுவனத்தின் இன்னொரு ஆலையில் இப்போது 2 ஜி மொபைல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.


அடுத்த, ஆண்டு 3 ஜி ஏலத்தை மத்திய அரசு முடிக்கும் தறுவாயில் மேலும் அதிக மொபைல்கள் தேவைப்படும். எனவே இந்த தேவையைச் சமாளிக்க ரூ 300 கோடியை கூடுதலாக முதலீடு செய்கிறது நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்.

மோட்டாரோலா நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் வழங்கும் அஸுர்

0 comments

வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும்.


இன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார்.

முதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.

கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு: கேட் தேர்வு ரத்து

0 comments

கமப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை உள்பட பல்வேறு தேர்வு மையங்களில் நடந்த கேட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக கேட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் முதன் முறையாக நவம்பர் 28ம் தேதி ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆனால் கம்ப்யூட்டர் சர்வர்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சென்னை, பெங்களூரு, லக்னோ, சண்டிகார் ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு ரத்தானது.

கேட் தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் , தேர்வு எழுத முடியாதவர்களுக்கு புதிதாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான புதிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும். இதுபோன்ற பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்படாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், கேட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வர் கோளாறால் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அடுத்த ஒன்பது நாட்களுக்கான தேர்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்ளலாம் என்றார்.

முன்னர், கேட் தேர்வு பேப்பர் - பென்சில் தேர்வாக நடந்து வந்தது. தற்போது அதை ஆன்லைன் தேர்வாக மாற்றி அமைத்ததால், அத்தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு முறையை மாற்றியமைத்ததால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கேட் தேரவு எழுதுபவர்கள் சதவீதமும் குறைந்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Sunday, November 29, 2009

692 இந்திய வெப்சைட் அழிப்பு

0 comments
Swine Fluசெப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவின் 692 இணையதளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 511 இணைய தளங்கள் அரசு இணைய தளங்களாகும். தகவல் தொழில் நுட்ப இலாகாவின் இணைய தளத்தின் மீது மட்டும் 63 தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றில் 21 சீனாவின் கைவரிசையாகும். மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கணினி நெருக்கடிகள் ஆய்வுக்குழு, இத்தகவலை தெரிவித் துள்ளது.

இணைய தளங்களை தாக்கி அழிக்க பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் முக்கியமானது இணைய தள நிர்வாகியின் பாஸ்வேர்டை திருடுதல் அல்லது அந்த இணைய தளத்தின் யூசர் பாஸ்வேர்டை திருடுதலாகும். இப்பாஸ் வேர்டுகள் கிடைத்துவிட்டால் இணைய தளத்தில் உள்ள தகவல்களை எல்லாம் ஒரு நொடியில் நீக்கிவிட்டு அந்த இடத்தில் குப்பைத் தகவல்களை நிரப்ப¤ விடலாம்.

மற்றொரு முறை, இணைய தளத்தை வழங்கும் சர்வரில் நுழைந்து குறிப்பிட்ட இணைய தளத்தை மட்டும் சீரழித்து விடுவதாகும். இணைய தளங்களை அழிப்பவர்கள் ராணுவம், துணை நிலை ராணுவம், பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளங்களின் மீது கூட தாக்குதல் நடத்தி உள்ளனர். கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களை கூட விட்டுவைக்கவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டார்
 

Friday, November 27, 2009

தொழில் நுட்பத்தின் பெயர்கள்

0 comments


தொழில் நுட்பங்கள் மற்றும் அவை தரும் சாதனங்கள் சிலவற்றிற்குப் பெயர் வந்த நிகழ்வுகளைக் காணலாம்.

1. பென்டியம் (Pentium): ஐ 286, 386 மற்றும் 486 என்று இன்டெல் நிறுவனம் தான் வடிவமைத்த சிப்களுக்கு வரிசையாகப் பெயர் சூட்டி வந்தது. 486 ஐ அடுத்து வர இருந்த சிப்பிற்கு ஐ 586 என்று தான் பெயர் வைக்க இன்டெல் எண்ணியிருந்தது. இதனைத் தனக்கு மட்டும் சொந்தமான ஒரு ட்ரேட் மார்க்காக வைக்கத் திட்டமிட்டிருந்தது.
ஏனென்றால் பிற நிறுவனங்கள் (ஏ.எம்.டி. ஏ.எம்486 என) இதே போல பெயரினைத் தங்கள் சிப்களுக்கு வைக்கத் தொடங்கி இருந்தன. ஆனால் அமெரிக்காவின் நீதி மன்றங்கள் எண்களை தனிப்பட்ட நிறுவனம் ஒன்றின் ட்ரேட் மார்க்காக வைத்துக் கொள்ள அனுமதி தரவில்லை. எனவே இன்டெல் நிறுவனம் லெக்ஸிகன் பிராண்டிங் என்னும் அமைப்பினைத் தனக்கு ஒரு பெயர் தருமாறு கேட்டுக்கொண்டது. அப்போதுதான் பென்டியம் (Pentium) என்ற பெயர் சொல்லப்பட்டது. இதில் "Pente" என்ற சொல் கிரேக்க மொழியில் ஐந்து என்ற பொருளைத் தரும். “ium” என்ற சொல் பின் ஒட்டு; ஆண், பெண் பெயர்ச்சொல் என்ற பேதமின்றி பொதுவான ஒரு ஒட்டாகும். இந்த இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்டு பென்டியம் (Pentium) உருவானது.

2. வாக்மேன் (Walkman): இப்போது வாக் மேன் என்றால் யாரும் நடக்கும் மனிதனை நினைக்க மாட்டார்கள். சட்டைப் பை அல்லது இடுப்பு பெல்ட்டில் மாட்டிக் கொண்டு இயர் போனைக் காதில் வைத்துப் பாட்டுக் கேட்கும் சாதனத்தைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவிற்கு அச்சாதனத்தினை மட்டுமே குறிக்கும் சொல்லாக வாக்மேன் உருவாகிவிட்டது. வாக்மேன் 1979ல் அறிமுகப்படுத்தப் பட்டது. இதனை சோனி நிறுவனம் அதிக நேரம் தன் நிறுவனத் துணைத் தலைவர் விமானப் பயணம் மேற்கொள்ளும்போது கேட்பதற்காக வடிவமைத்தது. நடக்கும்போது சுதந்திரமாக இசையைக் கேட்பதற்காக இது பின்னர் உருவானது. அதனால் தான் வாக்மேன் என்ற பெயரை இதற்குத் தந்தனர். ஆனால் ஜப்பானில் தான் இது வாக்மேன். அமெரிக்காவில் சவுண்ட் அபவுட் (Soundabout) என்று அழைக்கப்பட்டது. ஸ்வீடனில் ப்ரீஸ்டைல் (Freestyle) எனவும், பிரிட்டனில் ஸ்டவ் அவே (Stowaway) என்றும் பெயரிடப்பட்டன. ஆனால் காலப் போக்கில் வாக்மேன் என்ற பெயரே நிலைத்தது.

3. ஐபாட் (iPod) : ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்பி3 பிளேயர் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் ஒரு ஹப் (Hub) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிவமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு Pod மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ (டி) சேர்த்து அதனை ஐபாட் என பெயர் சூட்டினார்கள்.

4. பிளாக்பெரி (BlackBerry) : 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல் (Research in Mobile) நிறுவனம்,தன் புதிய இமெயில் சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு லெக்ஸிகன் பிராண்டிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. பெயரில் இமெயில் என்பது இருக்கக் கூடாது என்றும் திட்டமிட்டது. இமெயில் என்பது எதிர்பார்ப்பில் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல் என்று கருதியது. சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் சொல்லாக இருக்க வேண்டும் என விரும்பியது. அப்போது ஒருவர் அந்த இமெயில் சாதனத்தின் கீகள் ஒரு பழத்தின் விதைகள் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனே லெக்ஸிகன் பிராண்டிங் பழங்களின் பெயர்களை ஆய்வு செய்தது. மெலன், ஸ்ட்ரா பெரி போன்ற அனைத்து பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில் பிளாக்பெரி ((BlackBerry) என்ற பெயர் சாதனத்தின் நிறத்தை ஒத்து வருவதாக முடிவு செய்து அந்த பெயர் தரப்பட்டது.

5. ஆண்ட்ராய்ட் (Android) : கூகுள் நிறுவனத்தின் மொபைலுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் ஆண்ட்ராய்ட். இந்த சிஸ்டத்திற்கான வேலையை 2005ல் தொடங்குகையில் இந்த பெயர் உருவாகவில்லை. ஆனால் கூகுள் மிகவும் மர்மமான முறையில் இந்த பெயரைத் திடீரென அறிவித்தது. ஏனென்றால் கூகுள் மொபைல் போனுக்கான சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிப்பதே மர்மமான முறையில் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரகசியம் வெளியான நிகழ்வு, இன்டர்நெட்டில் கூகுள் நிறுவனத்தின் புரட்சி ஆகியன சேர்ந்து இந்த பெயரை உலகம் ஏற்றுக் கொள்ள வைத்தது.

6. பயர்பாக்ஸ் (Firefox) : எல்லா நிறுவனங்களைப் போல மொஸில்லாவும் தன் பிரவுசர் தொகுப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது காலம் திண்டாடியது. முதலில் பயர்பேர்ட் (Fire Bird) என்றுதான் இதற்குப் பெயர் சூட்டியது. ஆனால் இந்த பெயர் இன்னொரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு வைக்கப் பட்டிருந்ததால் பயர்பாக்ஸ் எனப் பெயர் சூட்டப் பட்டது. பயர்பாக்ஸ் என்பது செங்கரடிப் பூனையின் பெயர். ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என மொஸில்லாவின் மூத்த அறிஞர்களைக் கேட்டபோது, இந்தப் பெயர் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகவும் அதே போல நல்லதாகவும் உள்ளது என்று கூறினார்கள்.

7. ட்விட்டர் (Twitter) : சிறிய பறவைகள் SUT எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக் டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இதனை வடிவமைத் ததாகக் குறிப்பிட்டார். உடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள் பரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார். நாடு, கண்டம் சாராத அனைத்து பறவைகளும் பேசிக் கொள்ளும் மொழியின் ஒலி இன்று அனைத்து நாட்டு மக்களும் பேசிப் பகிர்ந்து கொள்ளும் தளத்தின் பெயராக அமைந்தது பொருத்தமே.

8.திங்க்பேட் (Thinkpad): 1992 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் மக்களின் நம்பிக்கைக்குரிய லேப் டாப் கம்ப்யூட்டராக இதனை வடிவமைத்தது. இதற்குப் பெயர் தர முனைந்த போது, ஐபிஎம் நிறுவனத்தின் ஒரு பிரிவினர் திங்க்பேட் என்ற எளிய சொல்லால் இதனைக் குறிப்பிடலாம் என்று கருத்து தெரிவித்தது. ஆனால் ஐபிஎம் தன் உற்பத்திப் பொருட்களுக்கு எப்போதும் எண்களைக் கொண்டே பெயர்களை அமைத்ததனால் அப்படியே இதற்கும் வைத்திட வேண்டும் என எண்ணியது. மேலும் திங்க்பேட் மற்ற மொழிகளில் எப்படி மொழி பெயர்க்கப்படுமோ என்று கவலையும் கொண்டது. ஆனால் எந்தக் குழப்பமும் இன்றி மிக அழகான பெயராக மக்கள் மனதில் திங்க் பேட் என்ற பெயர் ஊன்றியது.


9. விண்டோஸ் 7 (Windows7): விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்றியதனால், விண்டோஸ் பெயரினையே விட்டுவிடலாமா என்று மைக்ரோசாப்ட் சில காலம் எண்ணியது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொருட்களின் பெயரின் பின்னால் எண்கள் இருந்தால் அது அந்நிறுவனத்தின் தனித் தன்மையைக் காட்டுவதாக இருப்பதாக மைக்ரோசாப்ட் எண்ணியது. ஆனால் இந்த பெயரை தாமஸ் நாஷ் அறிவித்த போது இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது சிஸ்டம்; எனவே இந்த பெயர் இப்படித்தான் இருக்கும்; இந்த பெயரில் தான் இந்த சிஸ்டம் அழைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை இதற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி எனவே எண்ணத் தோன்றுகிறது.


10. அமேஸான் கிண்டில் (Amazon Kindle):  இ–புக் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் இது. இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா, அமேஸான் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது என்று பல பொருள் உண்டு. பழைய நார்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்தது. இந்த சொல்லின் மூலப் பொருள் மெழுகுவத்தி என்பதாகும். இந்த சொல்லைத் தந்து ஹிப்மா கூறுகையில், “நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப் பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம். மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது” என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.

கூகுள் பிரைவசி

0 comments

நாம் கூகுள் தரும் எந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூகுள் வைத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்று நாம் அறிவோம். ஜிமெயில், யு–ட்யூப், கூகுள் செக் அவுட், கூகுள் டாக்ஸ், கூகுள் காலண்டர், ஐகூகுள், பிகாசா வெப் ஆல்பம்ஸ், கூகுள் டாக் என எத்தனையோ இணைய வசதிகளைக் கூகுள் நமக்குத் தருகிறது. அப்போது நம்மைப் பற்றிய தகவல்களையும் பெறுகிறது. அது மட்டுமின்றி நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது, அது பற்றிய புள்ளி விபரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்கிறது.

ஒரு சிலர் கூகுள் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான தகவல்களைப் பெற்று வைத்துக் கொள்கிறது என்று கருதுகின்றனர். ஒரு சிலர் இது நம் தனி உரிமையைக்குள் தலையை விடும் செயல் என்றும் எண்ணுகின்றனர்.

இதனை எண்ணிப் பார்த்தோ என்னவோ, கூகுள் சென்ற மாதம் தன்னிடத்தில் தன் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் ஓர் ஏற்பாட்டினைச் செய்து தந்துள்ளது. தான் வைத்துள்ள தகவல்களை பயனாளர்கள் எடிட் செய்திடவும் வழி தருகிறது. இத்தகைய தகவல்கள் தங்கவைத்திடும் இடத்திற்கு கூகுள் பிரைவசி டேஷ்போர்டு எனப் பெயர் கொடுத்துள்ளது. இதில் நுழைந்து நாம் கூகுள் வைத்துக் கொள்ளக்கூடாத தகவல்களை எடிட் செய்திடலாம்.


http://www.google.com/dashboard என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் நம்முடைய கூகுள் இமெயில் முகவரி கொடுக்கப்பட்டு பாஸ்வேர்ட் கேட்கப்படுகிறது. பின் நம்மைப் பற்றிய தகவல்கள் கூகுளின் பல்வேறு சாதனங்கள் வாரியாகத் தரப்படுகின்றன. நம் மின்னஞ்சல் கடிதங்கள் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளும் முகவரிகள் எண்ணிக்கை, படங்கள், காலண்டர், வெப் ஹிஸ்டரி என அனைத்தும் பகுதி பகுதியாகத் தரப்படுகின்றன. ஆனால் அனைத்துமே ஒருவர் ஏற்கனவே தான் அறிந்து தந்த தகவல்களாகத்தான் இருக்கின்றன. இதில் என்ன நல்ல செய்தி என்றால், மற்ற இணைய சேவைத் தளங்கள் போல் அல்லாமல், கூகுள் இவற்றையும் எடிட் செய்திட நமக்கு உரிமை தருகிறது. எந்த தகவலையாவது கூகுள் கொண்டிருக்கக்கூடாது என நாம் எண்ணினால், அதனை நீக்கவும் இடம் உள்ளது.

பி.எஸ்.என்.எல்., '3 ஜி' மொபைல் இணைப்பு : 'பேன்சி' எண்களுக்கு போட்டா போட்டி

0 comments

பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வெளியிட்ட, "3 ஜி' மொபைல் இணைப்பின், "பேன்சி எண்' பெறுவதற்கான ஏலத்தில் பலத்த போட்டி நிலவுகிறது. பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி, "3 ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, "சிம்கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர," 2 ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி, "3 ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதே எண்ணுடன் கூடிய, கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு வழங்கப்படுகிறது.சமீபத்தில், "2 ஜி' சேவையில், 250 "பேன்சி' எண்கள் ஏலம் விடப்பட்டன. தான் விரும்பிய மொபைல் போன் எண் ணிற்காக, ஒருவர் அதிகபட்சமாக 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏலம் எடுத்துள்ளார். "2 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில், சென்னை தொலைபேசிக்கு, நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, "3 ஜி' மொபைல் இணைப்பு எண்களில், "பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய, "3 ஜி' இணைப்புகள் அனைத்தும், "94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை "பேன்சி' எண்களாக குறிக்கப்படுகின்றன. சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றிற் கென குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் 1,000 ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2,000 ரூபாயும், கடைசி ஐந்து எண்களுக்கு 3,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகை குறைந்தபட்ச இருப்புத் தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள், இந்த தொகையில் இருந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், சென்னையில், "3 ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள், "பேன்சி' எண்களாக பிரிக்கப்பட்டு, அவற் றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரிபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள், குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.300 வைத் திருக்க வேண்டும். ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். வரும் 1ம் தேதி வரை, ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். பதிவிற்குப் பின், ஏலத்திற்கான எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்காக ஒரு ரூபாய் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சென்னை தொலைபேசி தவிர, தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலை பேசி எண்கள் ஏலம் நடந்து வருகிறது. தற்போது நடந்துவரும், "3 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட, சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில், "" 3 ஜி' ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால், அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால், 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள், திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால், அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.

மீண்டும் தள்ளிப் போனது 3 ஜி ஏலம்

0 comments
பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் மீண்டும் தள்ளிப் போகிறது.

வருகிற 2010 ஜனவரி 14-ம் தேதி இந்த ஏலம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த ஏலம் சில கராரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பாதுகாப்புத் துறையின் அனுமதி காரணமாகவே டிசம்பர் 7-ம் தேதி நடப்பதாக இருந்த இந்த ஏலம் முன்பு தள்ளிப் போடப்பட்டது.

குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த அலைக்கற்றைகளை அனுமதிப்பதால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று பாதுகாப்புத் துறை கருதுவதால், அந்தப் பகுதிகளில் இந்த மின் அலைகள் இல்லாமல் சரி செய்யும் வேலை இன்னும் முடியவில்லையாம். இதனால்தான் இந்தத் தாமதமாம்.

ஆனால் எப்படியும் வருகிற பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இந்த ஏலம் நடக்கும் என தொலைத் தொடர்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிதியாண்டுக்குள் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்காவிட்டால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Thursday, November 26, 2009

3 ஜி போனுக்கு சென்னை மக்களிடம் அமோக வரவேற்பு!

1 comments

பிஎஸ்என்எல்லின் சென்னை தொலைபேசி சமீபத்தில் அறிமுகப்படுத்திய 3 ஜி போனுக்கு சென்னைவாசிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல்லின் வாடிக்கையாளர் சேவை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், இந்த புதிய தலைமுறை தொழில்நுட்பத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி பேசும் வசதியை விரும்பு அந்த இணைப்பைப் பெறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.

இன்டர்நெட், சினிமா பார்த்தல், டி.வி. சேனல்கள் பார்த்தல் என சகல வசதிகளும் நிறைந்த சேவை இது. குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் காதலர்களிடையே இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருக்கிற மொபைலை தலைமுழுகிவிட்டு, எப்படியாவது புதிய 3 ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்கள் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் இவர்கள்.

இந்த கருவிகளை வைத்திருப்போர் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று 3 ஜி சிம் கார்டுகள் பெறலாம். விலை ரூ.59 மட்டுமே.

ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு சந்தாதாரர்கள் 3ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

திட்டம் அறிமுகப்படுத்திய 2 நாட்களில் 700 பேர் 3ஜி இணைப்பை பெற்றுள்ளனர் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

திட்ட அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்புக்கு 50 பைசாவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்குள் 1 லட்சம் வாடிக்கையாளர்களை இத்திட்டத்தில் சேர்க்க பி.எஸ்.என்.எல். இலக்காக கொண்டு செயல்படுகிறது. இந்த வசதி விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப் போகிறார்களாம்.

2.5 லட்சம் பேருக்கு ஐடி துறையில் வேலை

0 comments


இந்தியாவில் 2.5 லட்சம் பேருக்கு ஐடி துறையில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக இன்போசிஸ் நிறுவன இயக்குனர் மோகன்தாஸ் பை கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:வேலைவாய்ப்பு நிலைமையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு போல மோசமான நிலைமை இந்த ஆண்டு தொடராது. 2 முதல் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். 100 புதிய வேலை வாய்ப்புகள் ஒரு ஐடி கம்பெனியில் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.அதில் 65 இடங்கள் புதிதாக கல்வி முடித்தவர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 35 இடங்கள் அனுபவம் உள்ளவர்களுக்கு கிடைக்கும்.சென்ற ஆண்டு மொத்தம் 16,000 பேரை வேலைக்கு எடுத்தோம். இந்த ஆண்டு 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுப்போம். வேலையிலிருந்து இடையில் நிற்போர் இன்போசிஸைப் பொருத்தமட்டில் 10 சதவீதம். ஊழியர்களுக்கு 7 முதல் 8 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என மோகன்தாஸ் தெரிவித்தார்.

Wednesday, November 25, 2009

வியக்க வைக்கும் ஒரு செய்தி

0 comments
இக் காணொளியை  காணவும்எஸ்எம்ஸ்-100 மடங்கு கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள்!

1 comments

எஸ்எம்எஸ் ரேட்டா அடியோடு குறைக்க தொலைத்தொடர்பு ஆணையம் ட்ராய் முடிவு செய்துள்ளது.

எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல் சேவைக்கு பல்வேறு மொபைல் சர்வீஸ் நிறுவனங்களும் கணிசமான கட்டணம் வசூலித்து வருகின்றன.

பல மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள், கால் சார்ஜைவிட அதிகமாக எஸ்எம்எஸ் கட்டணம் வசூலித்து வருகின்றன.

ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 50 காசு முதல் 1 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கும் ரேட் கட்டர் எனும் பெயரில் ஒரு தொகையை வசூலிக்கிறார்கள் (கட்டண குறைப்புக்காக). ஆனால் இதன்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று சோதித்துப் பார்க்கும் பொறுமையோ, நேரமோ யாருக்கும் இல்லை என்பதால் மொபைல் நிறுவனங்கள் காட்டில் வசூல் மழை.

உண்மையில் ஒரு எஸ்எம்எஸ்ஸின் விலை ஒரு பைசா அல்லது அதில் 10-ல் ஒரு பகுதிதானாம். காரணம் ஒரு குறுந்தகவலுக்கு அதிகபட்சம் 1 KB க்கும் குறைவான இடத்தையே எடுத்துக் கொள்கிறது. ஒரு KB-க்கு ஒரு பைசாதான் கட்டணம் எனும்போது, அதைவிட குறைவான இடமே தேவைப்படும் எஸ்எம்எஸ்ஸுக்கு ஒரு பைசாவுக்கும் குறைவாகத்தானே கட்டணம் வசூலிக்க வேண்டும்?

இதை வைத்துப் பார்க்கையில் குறைந்தது 40 முதல் 100 மடங்கு வரை ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பத்திரிகைகள் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

இதனால் எஸ்எம்எஸ் கட்டணங்களை குறைத்தே தீர வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது ட்ராய். விரைவி்ல் ஒரு எஸ்எம்எஸ் 1 பைசா அல்லது, குறிப்பிட்ட கட்டணத்துக்கு வாழ்நாள் முழுவதும் எஸ்எம்எஸ் வசதி என்ற அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த அறிவிப்பு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது .

இன்போஸிஸ் பிபிஓ சிஇஓ விலகல்!

0 commentsஇன்போஸிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அவுட்சோர்ஸிங் பிரிவு தலைமை நிர்வாகி அமிதாப் சௌத்ரி அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 2006-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் அமிதாப் சௌத்ரி. இன்போஸிஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவுக்கு தலைமை செயல் அலுவலராக அவர் பொறுப்பேற்றார்.

திடீரென்று இப்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கு காரணம் என்னவென்று அவர் தெரிவிக்கவில்லை.

இன்போஸிஸ் பிபிஓ முழுக்க முழுக்க இன்போஸிஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். நாட்டிலேயே இரண்டாவது பெரிய பிபிஓ யூனிட் இதுதான்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 26 சதவிகிதம் இதன் வருவாய் உயர்ந்திருந்தது. அமெரிக்காவின் மெக்காமிஷ் சிஸ்டம் நிறுவனத்தை சமீபத்தில்தான் இன்போஸிஸ் பிபிஓ வாங்கியது.

அனுமதி இல்லாமலேயே யார் இ&மெயிலையும் போலீஸ் பார்க்கலாம் - ஐ.டி. சட்டத்தில் திருத்தம்

0 commentsசைபர் கிரைம் எனப்படும் இணையதளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பல வழக்குகளில் புலன் விசாரணைக்கு இணைய தள பயன்பாடு, இமெயில் கடிதங்கள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. இந்நிலையில், விசாரணையின்போது ஒருவரது இமெயிலை பின்தொடரவும், திறந்து படிக்கவும் மத்திய உள்துறையிடம் போலீசார் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதனால், விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான அனுமதியை நாடாளுமன்றம் சமீபத்தில் அளித்தது. சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததும், வழக்குக்குத் தொடர்புடைய யாருடைய இமெயிலையும் மாநில உள்துறை அனுமதி பெற்று படிக்கும் அதிகாரம் போலீஸ் ஐஜிக்கு கிடைத்து விடும்.

எனினும், யாருடைய இமெயில் கண்காணிக்க வேண்டியுள்ளது என்பதை பணி தொடங்கிய 3 நாட்களுக்குள் மாநில உள்துறையின் செயலருக்கு போலீஸ் ஐஜி தெரிவிக்க வேண்டும். மாநில உள்துறை செயலரே அதற்கான அனுமதியை அளிக்க முடியும். அனுமதியை போலீசார் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

Monday, November 23, 2009

ரூ19/- செலுத்தி அதே எண்ணுடன் உங்கள் அலைபேசி சேவை நிறுவனத்தை மாற்றலாம்

0 comments
தொலைதொடர்பு  ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய் ) இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரூ19/- செலுத்தி நமது எண்ணுடன் நம் அலைபேசி சேவை நிறுவனத்தை மாற்றலாம் என்று அறிவித்துள்ளது.

இதன்படி ஒருவரது அலைபேசி எண் மற்றும் அவரது தொடர்புகள் மாறாமல் தங்கள் சேவை வழங்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ள முடியும்.

அதற்காக தொடர்பு பரிவர்த்தனை கட்டணமாக ரூ. 19/- மட்டும் அல்லது அதற்கு குறைவான கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவர் தமது சேவை நிறுவனத்தை மற்ற குறைந்த பட்சம 90 நாட்கள் அச்சேவையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று ட்ராய் அறிவுறிதியுள்ளது.

சேவை மாற்றுதல், பயனாளர் விண்ணப்பம் கொடுத்த நான்கு நாட்களுக்குள் மாற்றி முடிக்க வேண்டும்.

டிசம்பர் 2009 இறுதிக்குள் இச்சேவையை வழங்குமாறு ட்ராய் அலைபேசி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

திருட்டு சாப்ட்வேர்-மைக்ரோசாப்ட் புகார்: எமிரேட்ஸில் ரெய்ட்

0 comments

தங்களது நிறுவன சாப்ட்வேர்களை திருட்டுத்தனமாக காப்பி செய்து விற்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திருட்டு சாப்ட்வேர் ஒழிப்புப் பிரிவினர் பெரும் ரெய்டில் ஈடுபட்டு ஏராளமான திருட்டு சாப்ட்வேர்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளனர்.

எமிரேட்ஸில் உள்ள கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திருட்டு சாப்ட்வேர் லோட் செய்யப்பட்டிருந்த கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் மற்றும் திருட்டு சாப்ட்வேர் சிடிக்கள் சிக்கின.

துபாய் மற்றும் ஷார்ஜாவில் இந்த ரெய்டுகள் நடந்தன என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

உலகெங்கும் உலவி வரும் தங்களது நிறுவன திருட்டு சாப்ட்வேர்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே எமிரேடிஸ் நடந்த ரெய்டு என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

இந்த ரெய்டு குறித்து எமிரேட்ஸ் அரசின் பொருளாதாரத் துறை இயக்குநர் முகம்மது அகமது பின் அப்துல் அஜீஸ் அல் ஷிஹி கூறுகையில், வர்த்தகத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் இந்த திருட்டு சாப்ட்வேர் பெரும் தொல்லையாகும். இதன் விளைவு பொருளாதாரத்தில் எதிரொலிக்கும். எனவே இதை வேட்டையாட வேண்டியது அவசியமாகும் என்றார்.

டாப் 12 ஆசிய நிறுவனங்களில் ஐசிஐசிஐ, இன்போசிஸ், விப்ரோ

0 comments

தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் தலைமைப் பண்புகளை வளர்ப்பதில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல் 12 இடத்தில் உள்ள கம்பெனி களில் இந்தியாவை சேர்ந்த கம்பெனிகள் 5 உள்ளன. 
 
ஹெவிட் நிறுவனம், ஆர்பிஎல் குரூப், அமெரிக்க பத்திரிகையான பார்ச்சூன் ஆகியவை இணைந்து ஆசிய பசிபிக் நாடுகளின் கம்பெனிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளன. அந்த அறிக்கையில் முதல் 12 இடங்களைப் பிடித்துள்ள கம்பெனிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது. 
 
பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ. அடுத்த இரண்டு கம்பெனிகளும் சீனாவினுடையது. இப்பட்டியலில் உள்ள மற்ற இந்திய கம்பெனிகள் ஹிந்துஸ்தான் யூனி லீவர், ஆதித்யா பிர்லா குரூப், இன்போசிஸ் மற்றும் விப்ரோ.

உலக அளவில் முதல் 25 கம்பெனி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் 3 இந்த¤ய கம்பெனிகள் உள்ளன. இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதிலும் இந்நிறுவனங்கள் தங்களுடைய வளர்ச்சியை உறுதி செய்து கொண்டுள்ளன.

ஏர்டெல் இணையதள வடிவமைப்பு சேவை

1 comments
ஏர்டெல் நிறுவனம் புதிதாக தற்பொழுது இணையதள வடிவமைப்பு சேவையை துவங்கியுள்ளது. இதன்மூலம் தனது அகண்ட அலைவரிசை பயன்பாட்டாளர்களுக்கு சிறிய வணிகரீதியான இணையதள சேவையை எளிமையான WYSIWG தொகுப்பி (Editor) மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. இச்சேவை தற்பொழுது தனது அகண்ட அலைவரிசை சேவைக்காக பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்க முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது டி.எஸ்.எல். பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி இச்சேவையை பெறமுடியும்.
Airtel Website Builder
இச்சேவையில் ஐந்து பக்கங்கள் கொண்ட இணையதளம் முதற்கொண்டு அளவில்லா பக்கங்கள் கொண்ட இணையதளம் வரை மூன்று வகையான திட்டங்கள் உள்ளது. இது நிரந்தர தொகை மற்றும் மாத சந்தாவாகவும் வழங்கப்படுகிறது.

பயன்கள்:
 • உபயோகிக்க எளிது. இணையதளத்தை எளிமையான மூன்று வழிகளில் முன்வடிவு (Template) மூலம் எளிதாக உருவக்க முடியும்.
 • இணையதள வர்த்தகம் செய்வது, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக செய்வதற்கு எளைமையன வழிமுறைகளை கொண்டுள்ளது.
 • இணையதள போக்குவரத்தை கண்கானிக்க எளிதானது
 • இணையதள வடிவமைப்பு, களப்பெயர் பதிவு, போன்றவை அனைத்தும் ஒரே சேவையில் கிடைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு http://www.amitbhawani.com/blog/develop-new-site-airtel-website-builder/


Sunday, November 22, 2009

வருகிறது பாலிமர் நோட்டு!

0 comments
ரூபாய் தாள்கள் சீக்கிரம் சேதமாகி விடுவதால், அத்தனை சீக்கிரம் அழியாத பாலிமர் ரூபாய் நோட்டுக்களை புழகத்தில் விட மத்திய அரசு தயாராகி வருகிறது.

முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா எழுத்து மூலம் அளித்த பதிலில், "ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காக சோதனை அடிப்படை யில் ஒரு பில்லியன் பாலிமர், பத்து ரூபாய் நோட்டுத் தாள்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சோதனை அடிப்படையில் பாலிமர் நோட்டுகளை வாங்கும் பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.

பத்து ரூபாய் நோட்டுகளில் பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கள்ள நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறையும்" என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாதான் முதன் முதலில் பாலிமர் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது.

அந்த வெற்றியைப் பார்த்து இன்று பல ஐரோப்பிய நாடுகளும் பாலிமரை நோட்டுக்களை அறிமுகப்படுத்தி, நோட்டடிக்கும் செலவைக் குறைத்தன.

அட பக்கத்து நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் கூட இந்த பாலிமர் நோட்டுதான் புழக்கத்தில் உள்ளது.

ரோமிங் கட்டணத்தில் 60 சதவீதத்தைக் குறைத்தது ஏர்டெல்

0 comments
பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரோமிங் கட்டணம் 60 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், இந்திய செல்போன் வாடிக்கையாளர்களில் 23 சதவீதத்திற்கும் மேற்பட்டோரைக் கொண்டுள்ளது.

தற்போது செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும் ஏர் டெல் தரப்பிலிருந்து பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் ரோமிங் கட்டணத்தில் 60 சதவீதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது ஏர்டெல்

Friday, November 20, 2009

ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ள மெகா கோடீஸ்வரர்கள்

0 comments

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 2 மடங்காக உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.

இந்தியாவின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் ஆசியா பொருளாதார இதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி. இது இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்காகும். அதாவது, 25 சதவீதம்.

கடந்த ஆண்டின் போர்ப்ஸ் பட்டியலின்படி, ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. இப்போது அது 54 ஆக உயர்ந்துள்ளது. இது 100 சதவீதம் அதிகம். கடந்த சில மாதங்களில் பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதும், பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக நீடிப்பதும் புதிய பணக்காரர்கள் உருவாக காரணமாக அமைந்தது.

இதுபற்றி போர்ப்ஸ் ஏசியா ஆசிரியர் நஸ்ரீன் கர்மாலி கூறுகையில், "இந்திய கோடீஸ்வரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான நாட்கள் திரும்பியுள்ளன. இந்த ஆண்டு பட்டியலில் புதுமுகங்கள் சேர்ந்திருப்பது, இந்திய பங்குச் சந்தையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கிறது" என்றார்.

உலகின் வேறெந்த நாடுகளையும் விட அதிக கோடீஸ்வரர்களை குறுகிய காலத்தில் உருவாக்கும் வளமும், வாய்ப்புகளும் இந்தியாவில் மட்டுமே உள்ளன. புதிய கோடீஸ்வரர்கள் எல்லா துறைகளில் இருந்தும் உருவாகி இருப்பதே இதற்கு சாட்சி என்றும் நஸ்ரீன் கூறினார்.

போர்ப்ஸ் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து இந்த ஆண்டும் நாட்டின் முதல் பணக்காரராக நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி. இங்கிலாந்து வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல், ரூ.1.41 லட்சம் கோடியுடன் 2வது இடத்தில் உள்ளார். முகேஷின் தம்பி அனில் அம்பானி ரூ.82,500 கோடி சொத்துடன் 3வது இடத்தில் இருக்கிறார்.

சென்னை அலுவலகத்தை மூடுகிறது சோனி எரிக்ஸன்

0 comments
உலகில் உள்ள தனது சில முக்கிய கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது சோனி எரிக்ஸன் நிறுவனம். இதன் மூலம் 2000 பணியாளர்களைக் குறைக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கிளையும் அடங்கும். இதன் மூலம் சென்னையில் மட்டும் 420 பேர் பணியிழப்புக்கு உள்ளாகின்றனர்.

முக்கோண ஆராய்ச்சிப் பூங்கா - Research Triangle Park - எனும் பெயரில் உலகில் சில முக்கிய இடங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தியிருந்தது சோனி எரிக்ஸன்.

இப்போதைய நிதி நெருக்கடியான சூழலில் செலவுக் குறைப்பே பிரதானம் என்பதால், தனது முக்கிய கிளைகள் சிலவற்றை பிற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கிறது சோனி.

அதன்படி வட அமெரிக்காவிலிருந்த சில அலுவலகங்களை மொத்தமாக அட்லாண்டா நகருக்கு மாற்றியுள்ளது. இன்னும் சிலவற்றை கலிபோர்னியாவிலுள்ள ரெட்வுட் ஷோர்ஸ் பகுதிக்கு மாற்றிவிட்டது.

இந்தியாவில் சென்னையில் இருந்த சோனி எரிக்ஸன் அலுவலகம் மூடப்படுகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ள லுண்ட் நகருக்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளால் சோனி எரிக்ஸன் நிறுவனத்தில் உள்ள 2000 பணியாளர்கள் வேலை இழக்கிறார்கள். வரும் 2010 ஆண்டு மூன்றாவது காலாண்டுக்குள் இந்த செலவுக்குறைப்பு நடவடிக்கை முடிந்துவிடுமாம்.
சென்னை அலுவலகம் மூடப்படுவதால் உள்ளூரில் 420 தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள்.

3 ஜி சேவை... நாளை முதல் தமிழகத்தில்

0 comments

சென்னையில் நாளை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஜி மொபைல் சேவை அறிமுகமாகிறது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

வீடியோ கான்பரன்ஸிங் உள்ள பல நவீன வசதிகளை அளிக்கும் அடுத்த தலைமுறைக்கான மொபைல் சேவையை கடந்த பிப்ரவரி மாதமே அறிமுகப்படுத்தியது பிஎஸ்என்எல்.

ஆனால் இந்த திட்டம் வட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதுகுறித்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் விவரம் கேட்டும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்களுக்குத் தெரியாது என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த திட்டத்தை சென்னையில் நாளை முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கான தொடக்க விழா அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலகத்தில் நடக்கிறது.

இந்த 3ஜி தொழில் நுட்பம் மூலம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு தவிர இன்டர் நெட், டெலிவிஷன் நிகழ்ச்சிகள், திரைப்படம் போன்ற பல வசதிகளை அனுபவிக்க முடியும்.

இந்த 3ஜி தொழில் நுட்ப வசதியை தற்போதுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். இதற்காக அவர்கள் புதிய இணைப்பு எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

பி.எஸ்.என்.எல். பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.120 ரீசார்ஜ் செய்தும், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தியும் 3ஜி தொழில் நுட்ப வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் பி.எஸ். என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் லோக்கலில் பேச நிமிடத்திற்கு ரூ.1-ம், எஸ்.டி.டி பேச ரூ.1.50-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக லோக்கலுக்கு நிமிடத்திற்கு ரூ.30 பைசா, எஸ்.டி.டி.க்கு ரூ.50 பைசாவும் இப்போதைக்கு குறைக்கப்படுகிறது. புதிய கட்டண திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Wednesday, November 18, 2009

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு புற்று நோய்

0 comments

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸுடன் இணைந்து உருவாக்கியவரான பால் ஆலனுக்கு புற்று நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பால் ஆலனுக்கு லிம்போமா என்ற வகை புற்று நோய் தாக்கியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் தொடர்பான ஹாட்கின்ஸ் நோய் அவரைத் தாக்கியது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார் ஆலன். தற்போது லிம்போமா புற்றுநோய் அவரைத் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

56 வயதாகும் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது அவரது உல்கான் நிறுவன இணையதளத்தில், இந்த மாதத் தொடக்கத்தில் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. தற்போது கீமோதெரபி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல்கான் நிறுவன தலைமை செயலதிகாரியும், சகோதரியுமான ஜோடி ஆலன் கூறுகையில், லிம்போமாவின் பொது வகையான பி செல் லிம்போமா ஆலனை தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

இது பால் ஆலன் குடும்பத்திற்கு கஷ்டமான செய்தியாக வந்துள்ளது. இருப்பினும் பால் முன்பு ஹாட்கின்ஸ் நோயை வென்றவர். எனவே இதையும் அவர் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

பால் ஆலன் தற்போது நன்றாக உள்ளார். தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்றார்.

70களில் பில் கேட்ஸுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர் பால் ஆலன். மைக்ரோசாப்ட்
Paul Allen
நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுனராக 1983ம் ஆண்டு வரை இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். அந்த ஆண்டில்தான் அவருக்கு ஹாட்கின்ஸ் நோய் தாக்கியது.

கடந்த செப்டம்பர் மாதம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 400 அமெரிக்க பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்தைப் பிடித்தார் பாலன் ஆலன். அவரது சொத்து மதிப்பு 11.5 பில்லியன் டாலர்களாகும்.

பட்டாசுத் தொழிலில் உலக சந்தையில் போட்டியிட தமிழகம் முயற்சி

0 comments

இந்தியாவில் பட்டாசுத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு , இத்தொழிலில் உலகளவில் போட்டிபோடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

முதல்கட்டமாக இதற்கான விரிவான சர்வே ஒன்றை நடத்த மாநில அரசு  திட்டமிட்டுள்ளது. இந்த சர்வேயின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

சீனாவில் கூட பட்டாசு தொழிலுக்கென சிறப்பு பொருளாதார மண்டலம் இல்லை. ஆனால், தமிழகத்தில் தேவைப்பட்டால் இதற்கென சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும் அரசு தயாராக இருப்பதாக அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பட்டாசுத் தொழிலின் மையமாக கருதப்படுவது சிவகாசியாகும். இங்கு சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்டுகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக அறிந்து, தயாரிப்பு திறனை கணக்கிட்டு அதற்கு தேவையான நிதி மற்றும் இதர ஆதரவையும் வழங்க அரசு தயாராகி வருகிறது.

சர்வேயின் அடிப்படையில், பட்டாசுத் தொழிலுக்கென தனி தொழிற்பேட்டை அமைக்கலாமா அல்லது சிறப்பு பொருளாதார மண்டலமே அமைக்கலாமா என்பது குறித்து அரசு முடிவு செய்யும்.

இதுகுறி்த்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிஜிதாமஸ் வைத்தியன் கூறுகையில், 'பட்டாசுத் துறையில் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் தேவை அதிகரிக்கிறது. பட்டாசு தயாரிப்பில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவுடன் ஒப்பிடும் போது, நம்முடைய உற்பத்திச் செலவு கணிசமான அளவு அதிகமாக உள்ளது.

எனவே, உலக சந்தையை எதிர்கொள்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனபதை அறிய ஆய்வு நடத்தப்பட உள்ளது. பட்டாசு ஏற்றமதியில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உண்டு. அவற்றை எதி்ர்கொள்வது குறித்தும் ஆராயப்படும்' என்றார்.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: ரூ.13 ஆயிரத்தை நெருங்குகிறது

0 comments

நவ. 17: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி பவுன் விலை ரூ.11,920 ஆக இருந்தது. இது நவம்பர் 2-ம் தேதி ரூ.12,104 ஆக அதிகரித்தது. இதன் மூலம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பவுன் விலை ரூ.12 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இப்போது ரூ.13 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 
 
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.1,605. திங்கள்கிழமை விலை: ஒரு பவுன் ரூ.12,784. ஒரு கிராம் ரூ.1,598. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில மாதங்களாக வெகுவாக அதிகரித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது என்கின்றனர் வியாபாரிகள். முதல் முறையாக, ஒரே மாதத்தில் பவுனுக்கு ரூ.900 அளவுக்கு உயர்வு ஏற்பட்டிருப்பதால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tuesday, November 17, 2009

உலக மொழிகளில் இணைய முகவரி

0 comments

இன்டர்நெட் தள முகவரிகளை இன்றளவிலும் ஆங்கிலத்தில் தான் அமைத்து வருகிறோம். இதனை மற்ற மொழிகளிலும் அமைத்து இயக்கும் காலம் விரைவில் வர இருக்கிறது.
 
இன்று நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் உண்மையிலேயே உலக மக்கள் அனைவரின் சொத்தா? ஆம், அதில் என்ன சந்தேகம். யாரும் இன்டர்நெட்டை அணுகலாம். தகவல்களைத் தேடலாம். அவர்கள் மொழியில் தளங்களை அமைக்கலாம். சில நாடுகள் இன்டர்நெட் இணைப்பினை மனிதனின் அடிப்படை உரிமையாகவும் தேவையாகவும் பிரகடனப்படுத்தி உள்ளதே. அப்படியானால் ஏன் இன்னும் இன்டர்நெட் தள முகவரிகளை ஆங்கிலத்தில் மட்டுமே அமைத்து வருகிறோம். அனைத்துலக மொழிகளில் ஏன் அமைக்கக் கூடாது? நல்ல, நியாயமான கேள்வி.

இன்டர்நெட்டை உலகளாவிய அளவில் 160 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பாதிப்பேருக்கு ஆங்கிலம் அந்நிய மொழியாகும். எனவே தான் காலத்தின் கட்டாயத்தில் இணைய முகவரிகளை ஆங்கிலம் அல்லாத மொழிகளிலும் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட்டின் 40 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு பெரும் திருப்புமுனையாகும்.

தொழில் நுட்ப வசதிக்காகத்தான் நாம் ஆங்கில எழுத்துக்களில் அமைத்துவருகிறோம். அடிப்படையில் இன்டர்நெட் தள முகவரிகள் எண்களில் தான் உள்ளன. நாம் அதனை மனதில் கொண்டு பயன்படுத்த முடியாது என்பதால் தான், ஆங்கிலச் சொற்களில், தொடக்க காலம் தொட்டு பயன்படுத்தி வருகிறோம். மற்ற மொழிகளில் பயன்படுத்தக் கூடாது; இப்படியே ஆங்கிலத்தில் இருக்கட்டும் என்று யார் சொல்வது? இன்டர்நெட் தளங்களின் பெயர்கள் எப்படி அமைய வேண்டும் என்பதனை Internet Corporation for Assigned Names and Numbers (Icann) என்ற அமைப்பு தான் வரையறை செய்து வருகிறது. இதுவரை ஆங்கிலத்தில் தான் வெப்சைட் முகவரிகள் இருக்க வேண்டும் எனக் கூறி வந்த இந்த அமைப்பு, அண்மையில் தென் கொரியா, சீயோல் நகரில் நடந்த கூட்டத்தில் மற்ற மொழிகளிலும் முகவரிகள் இருக்கலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டது.

இந்த மாற்றத்தை வரவேற்றவர்கள், இன்டர்நெட் செயல்பாட்டில் இது மாபெரும் தொழில் நுட்ப மாற்றமும் வரும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளில் முகவரிகள் அமைக்கப் பட்டால், இன்டர்நெட் இன்னும் பல கோடி மக்களைச் சென்றடையும். எந்த மொழியில் அமைக்கப்பட்டாலும், இன்டர்நெட் முகவரியின் இறுதிச் சொல் ..com, .gov, .co.uk, .cn போன்ற ஒன்றில்தான் முடிவடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் முதன் முதலில் அமெரிக்க நாட்டில் தான் செயல்படுத்தப்பட்டது. அங்கு ஆங்கில மொழி சொற்களில் தான் முகவரிகளை அமைத்தனர். அதுவே உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்டர்நெட் பயன்பாடு வேகமாகப் பரவி வரும் இந்நாளில், அதுவே பொருளாதார மேம்பாட்டின் ஓர் அங்கமாக இயங்கும் இந்நாளில், பிற மொழிகளையும் இன்டர்நெட் ஏற்றுக் கொள்வது அவசியம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த முடிவினை ஐகான் எடுத்துள்ளது. பிற மொழிகளில் முகவரிகள் அமைத்திட ஐகான் அமைப்பு இன்று முதல் விண்ணப்பங்களைப் பெற இருக்கிறது. அநேகமாக முதலில் சீன, அரபிக் மற்றும் ரஷ்ய மொழிகளில் இந்த முகவரிகளுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டு ஓரளவில் இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் ஐ–டி.என்.எஸ். என்ற நிறுவனம் தமிழ், சீனம், ஜப்பானிய மொழிகளில் இணைய முகவரியை அமைக்க முன்வந்து, அதனை விற்பனைக்கும் கொண்டு வந்தது. கம்ப்யூட்டர் ஒன்றில் பிற மொழிகளைப் பயன்படுத்த எண்ணம் உள்ளவர்கள், அதற்கான புரோகிராமினை இந்நிறுவனத்தின் தளத்தில் இருந்து இறக்கிப் பதிந்து கொள்ள வேண்டும். பின் தமிழில் டைப் செய்வதற்கான கீ போர்டு மற்றும் எழுத்து வகையினையும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த முன் தேவைகளை அமைத்துக் கொண்டவுடன், இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்கியவுடன், கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம், முகவரியை வாங்கி, இந்நிறுவனம் உலகெங்கும் பல இடங்களில் நிறுவியுள்ள தன் சர்வருக்கு அதனை அனுப்பும். அந்த சர்வர்கள் அதனை ஆங்கிலத்திற்கு மாற்றி, அங்கிருந்து ஆங்கில முகவரி அடிப்படையில் தளங்களைப் பெற்று முகவரி தொடங்கிய கம்ப்யூட்டருக்கு இணைப்பினைத் தரும். தொடக்கத்தில் இது வெற்றி அடைந்தது; பின்னர் இந்த முயற்சி தமிழ் நாட்டில் உரம் பெறவில்லை. ஆனால் இப்போது ஐகான் அனுமதி தந்த பின்னர், தொழில் நுட்பம் எந்த வகையில் மாறப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்த அனைத்து மொழி மாற்றம், இன்டர்நெட் பயன்பாட்டிலும், உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும்.

ஆசிய பசிபிக் நாடுகள் தேடலில் முதல் இடம்

0 comments
இன்டர்நெட் தேடல்கள் இன்று அறிவியல் தாகத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் சென்ற செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள் முன்னணியில் இருந்தன.

ஏறத்தாழ 3 ஆயிரத்து 60 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்டவற்றைக் காட்டிலும் 33% கூடுதலாகும். சராசரியாக ஒரு பயனாளர் இந்த மாதத்தில் மேற்கொண்ட தேடல்கள் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தேடல்களில் 44% கூகுள் சர்ச் இஞ்சின் வழியாக மேற்கொள்ளப்பட்டன. இதன் வழியாக 1,700 கோடி தேடல்கள் நடந்தன. இது மொத்தத்தில் 44.1 % ஆகும்.

அடுத்ததாக Baidu.com என்ற தேடுதல் (21.3%)தளம் இடம் பெற்றுள்ளது.

மூன்றா வதாக யாஹூ 13.8% பங்குடன் 530 கோடி தேடல் களைக் கொண்டி ருந்தது. ஆனால் ஹாங்காங் மற்றும் தைவானில் அதிக தேடல்கள் யாஹூ தளம் வழியாகவே மேற்கொள்ளப்பட்டன.

மேலே தரப்பட்ட தேடல் தகவல்கள் அனைத்தும் 15 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொண்ட தேடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும். பொது இன்டர்நெட் மையங்கள் மற்றும் பிடிஏ சாதனங்கள் வழி மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.

25 வருட சிறை தண்டனை காப்பாற்றியது பேஸ்புக்

0 comments
பேஸ்புக் எனப்படும் சோஷியல் நெட்வொர்க் இணையதளத்தால் 25 வருட சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார் ஒரு வாலிபர்.

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் ராட்னி பிராட்பர்டு. புரூக்லின் நகரில் உள்ள ஒருவரது வீட்டில் துப்பாக்கியுடன் நுழைந்து திருடியதாக இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். எனினும், குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் அவர் பேஸ்புக் இணையதளத்தில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கைது செய்யப்பட்ட 13வது நாளில் பிராட்பர்டு விடுதலை செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக, அப்பகுதி மாவட்ட நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனா ப்ருனோ தெரிவித்துள்ளார். துப்பாக்கியுடன் திருட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டிருந்தால், அந்த இளைஞர் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்க வேண்டியிருக்கும் என வழக்கறிர் ராபர்ட் ரூலன்ட் தெரிவித்தார்.

இதுகுறித்து பிராட்பர்டு கூறுகையில் திருடியதாக கூறப்பட்ட நேரத் தில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஓட்டலுக்கு வராமல் போன என்னுடைய காதலியை திட்டிக் கொண்டிருந்தேன்என்றார்.

Monday, November 16, 2009

இன்டர்நெட்டில் சில்மிஷம் கணவனை சிக்கவைத்த மனைவி

0 comments


இன்டர்நெட் சாட்டிங் மூலம் பள்ளி மாணவிகளை மயக்கி தவறான செய்கையில் ஈடுபட்ட கணவனை, பள்ளி மாணவியைப் போல நடித்து போலீசில் சிக்க வைத்துள்ளார் அவரது மனைவி. லண்டனை சேர்ந்தவர் செரில். இவருக்கு வயது 61.இவரது கணவர் டேவிட். வயது 68. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 2 குழந்தைகள் உள்ளனர். தன் கணவர் இந்த வயதிலும் இன்டர்நெட் சாட்டிங் மூலம் பள்ளி மாணவிகளிடம் பேசி மயக்கி, செக்ஸுக்கு அழைப்பதை ஒரு நாள் கண்டறிந்தார் செரில். ஒரு நாள் டேவிட் வெளியில் சென்றிருந்தார். அப்போது, வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில், சாட்டிங் ரூமிலிருந்து ஒரு மெசேஜ் பிளிங்க் ஆகிக் கொண்டிருந்தது. அதில், தவறான நோக்கத்துடன் ஒரு பள்ளி மாணவிக்கு டேவிட் அழைப்பு விடுத்திருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் செரில். எனினும், அதைக் காட்டிக் கொள்ளாமல், வீட்டில் உள்ள இன்னொரு அறையில் புதிய கம்ப்யூட்டரை வாங்கி வைத்தார். அந்த கம்ப்யூட்டரிலிருந்து, 14 வயது பள்ளி மாணவி போல நடித்து கணவருடன் சாட்டிங் செய்தார். மனைவிதான் சாட்டிங்கில் இருக்கிறார் எனத் தெரியாத டேவிட், ஜொள்ளு விட்டார். தனியாக சந்திக்க வரும்படி அழைத்தார். உடனே இதுகுறித்து செரில் போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.அவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். செரில் கொடுத்த புகாரின் பேரில் டேவிட்டை கைது செய்துள்ளோம். அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறோம். கார்க்கி என்ற புனைப் பெயரில் அவர் பள்ளி சிறுமிகளுடன் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 
 
18 வயதுக்கு குறைந்த சிறுமிகளுடன் தவறான நோக்கத்துடன் பேசுவது, சட்டப்படி பயங்கரமான குற்றம் என இந்த வழக்கில் வாதாடி வரும் மார்ட்டின் கெல்லி என்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

செல்போன் கேமிங் ரூ.1880 கோடியாக அதிகரிக்கும்

0 comments
நாட்டின் செல்போன் கேமிங் தொழில் வர்த்தகம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இது ரூ.470 கோடியாக உள்ளது. மூன்றாம் தலைமுறை (3ஜி) வசதியுடன் கூடிய செல்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், ஆண்டுக்கு 50 முதல் 70 வளர்ச்சியை எட்டும். இதனால், வரும் 2012ம் ஆண்டில் கேமிங் தொழில் வர்த்தகம் ரூ.1,880 கோடியாக அதிகரிக்கும் என கேமிங் தொழிலில் ஈடுபட்டுள்ள நசரா டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி நித்திஷ் மித்தர்சென் தெரிவித்தார்.

Sunday, November 15, 2009

வாடிக்கையாளர் கணக்கில் முறைகேடு சுவிஸ் வங்கிக்கு ரூ.62 கோடி அபராதம்

0 comments
வாடிக்கையாளர்களின் கணக்கை, 4 ஊழியர்கள் தவறாக பயன்படுத்தியதற்காக சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கிக்கு ரூ.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2006 முதல் டிசம்பர் 2007 வரையிலான காலத்தில், பிரிட்டனில் உள்ள யுபிஎஸ் கிளையின் உயர் அதிகாரிகள் சிலர், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தி இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் ஆகிய 2 இந்திய நிறுவனங்களின் கணக்குகள் உட்பட 39 வாடிக்கையாளர்களின் கணக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

எனினும், வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டுள்ளனர். வெளிநாட்டு முதலீடாக இந்திய பங்குச் சந்தைகளில் அந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.200 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த புகார் குறித்து விசாரித்த பிரிட்டனின் நிதி சேவை ஆணையம், ஊழியர்களை கண்காணிக்கத் தவறிய யுபிஎஸ் வங்கிக்கு ரூ.60 கோடி அபராதம் விதித்துள்ளதாக பிரிட்டனில் பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.

செல்​போன் கட்டணக் குறைப்பால் யாருக்கு லாபம்?

1 comments
செல்​போன் கட்​ட​ணங்​க​ளைக் குறைப்​ப​தில் தனி​யார் நிறு​வ​னங்​க​ளி​டையே கடும் போட்டி சமீப கால​மாக அதி​க​ரித்​துள்​ளது. இந்​தப் போட்​டி​யில் அர​சுத் துறை நிறு​வ​னங்​க​ளும் இறங்கி,​ தாங்​க​ளும் தனி​யார் நிறு​வ​னங்​க​ளுக்கு சளைத்​தவை அல்ல என்று கட்​ட​ணக் குறைப்பை வெளி​யிட்​டுள்​ளது. உண்​மை​யில் இத​னால் யாருக்​குப் பயன்?


 • ÷ஒரு விநா​டிக்கு என்ற அடிப்​ப​டை​யில் கட்​ட​ணம் குறைக்​கப்​பட்​ட​தால் வாடிக்​கை​யா​ளர்​க​ளுக்​குப் பெரும் லாபம் கிடைத்​ததா என்​றால் அதற்கு விடை யாருக்​குமே தெரி​யாது என்​று​தான் கூற வேண்​டும். 
 
 • ÷÷ஒரு காலத்​தில் அழைப்​பு​கள் வந்​தாலே செல்​போன் கட்​ட​ணம் என்​றி​ருந்த நிலை தற்​போது தலை​கீ​ழாக மாறி​விட்​டது. பேசப்​பேச உங்​க​ளுக்கு சலுகை என்று நிறு​வ​னங்​கள் அறி​விக்​கும் நிலை பர​வ​லாக அதி​க​ரித்​துள்​ளது.
 
 • ÷கட்​ட​ணக் குறைப்பை மட்​டுமே நிறு​வ​னங்​கள் பர​வ​லாக விளம்​ப​ரப்​ப​டுத்​து​கின்​றன. அதை​யே​தான் முன்​னி​லைப் படுத்​து​கின்​றன. ஆனால் அவை அளிக்​கும் சேவை குறித்து எந்​த​வித தக​வ​லும் தெரி​விப்​ப​தில்லை. ​
 
 • ÷பெ​ரும்​பா​லான நிறு​வ​னங்​கள் அறி​வித்​துள்ள அனைத்து கட்​ட​ணக் குறைப்​பும் குறிப்​பிட்ட கால வரை​ய​றை​தான் என்​பது பல​ருக்​கும் தெரி​யாது. அதன்​பின்​னர் படிப்​ப​டி​யாக பழைய நிலைக்கு விலை உயர்த்​தப்​ப​டும் என்​பது எழு​தப்​ப​டாத அல்​லது கண்​ணுக்​குத் தெரி​யாத வகை​யில் விளம்​ப​ரப்​ப​டுத்​தப்​பட்ட சட்​ட​மாக உள்​ளது.
 
 • ÷சேவை அளிக்​கும் நிறு​வ​னத்​தின் செல்​போன் வைத்​தி​ருப்​ப​வர்​க​ளு​டன் தொடர்பு கொண்​டால் மட்​டுமே இந்​தச் சலுகை. பிற செல்​போன் நிறு​வன செல்​போ​னில் தொடர்பு கொண்​டால் கூடு​தல் கட்​ட​ணம் என்​பதை பெரும்​பா​லான நிறு​வ​னங்​கள் தெரி​விப்​பதே இல்லை. ​
 
 • ÷இ​தே​போல எஸ்​டிடி அழைப்​பு​க​ளுக்​கும் இந்​தச் சலுகை அளிப்​ப​தாக பல நிறு​வ​னங்​கள் அறி​வித்​துள்​ளன. ஆனால் இது​வும் குறிப்​பிட்ட காலம் வரை​தான் என்​பது அறி​விக்​கப்​ப​டாத ஒன்​றாக உள்​ளது.
 
 • ÷எஸ்​டிடி அழைப்​பு​க​ளுக்கு ஒரு விநா​டிக்கு ஒரு பைசா கட்​ட​ணம் முதல் 450 நிமி​ஷங்​க​ளுக்கு மட்​டும்​தான் என்​பது எத்​தனை வாடிக்​கை​யா​ளர்​க​ளுக்​குத் தெரி​யும். அதன்​பின்​னர் வழக்​கம்​போல ஒரு விநா​டிக்கு 2 காசு வீதம் வசூ​லிக்​கப்​ப​டும். பில் வரும்​போ​து​தான் வாடிக்​கை​யா​ள​ருக்கு இந்த விவ​ரம் தெரி​யும். இன்​னும் சில பகு​தி​க​ளில் முதல் 15 நிமி​ஷத்​துக்​குத்​தான் விநா​டிக்கு ஒரு காசு என்ற அடிப்​ப​டை​யில் கட்​ட​ண​மும் 15 நிமி​ஷத்​துக்​குப் பிறகு விநா​டிக்கு 2 காசும் வசூ​லிக்​கப்​ப​டு​கி​றது. இதை பல நிறு​வ​னங்​கள் செயல்​ப​டுத்​து​கின்​றன. ஆனால் வாடிக்​கை​யா​ளர்​கள் இதைப்​பற்றி அறி​யா​மல்,​ வழக்​கம்​போல பேசிக்​கொண்​டே​யி​ருக்​கின்​ற​னர். 
 • ÷வி​நாடி அடிப்​ப​டை​யில் கட்​ட​ணம் என்று அறி​விப்பு வெளி​யிட்​ட​தோடு அதில் உள்ள நிபந்​த​னை​கள் அது எத்​த​னைக் காலம் வரை அம​லில் இருக்​கும் என்ற விவ​ரத்​தை​யும் வாடிக்​கை​யா​ளர்​கள் தெரிந்து கொண்டு அதன்​பி​றகு இந்த முறைக்கு மாறு​வ​தில் பயன் இருக்​கும். ​
 
 • ÷கு​றிப்​பிட்ட நிறு​வ​னம் அறி​வித்​துள்ள கட்​ட​ணக் குறைப்பு எந்​தெந்த பிரி​வு​க​ளுக்​குப் பொருந்​தும் என்​றும் ரோமிங் கட்​ட​ணம் எவ்​வ​ளவு என்​ப​தை​யும் தெளி​வா​கத் தெரிந்து கொள்ள வேண்​டும். அத்​து​டன் எஸ்​டிடி கட்​ட​ணம் எவ்​வ​ளவு காலத்​துக்​குப் பொருந்​தும். அதன்​பி​றகு எவ்​வ​ளவு கட்​ட​ணம் என்​ப​தைத் தெரிந்து கொண்டு பின்​னர் தேர்வு செய்ய வேண்​டும். ​
 
 • ÷தற்​போது செல்​போன் சேவை அளிக்​கும் நிறு​வ​னங்​கள் திரைப்​ப​டப் பாடலை காலர் டோன் மற்​றும் ரிங் டோனாக வைப்​ப​தற்​கான வச​தியை அளிக்​கின்​றன. இதற்கு அவை வசூ​லிக்​கும் கட்​ட​ணத்​தைத் தெரிந்து கொண்ட பிறகு அதைத் தேர்வு செய்​வது புத்​தி​சா​லித்​த​னம். இல்​லை​யெ​னில் நீங்​கள் போஸ்ட் பெய்ட் வாடிக்​கை​யா​ள​ராக இருந்​தால் உங்​க​ளது பில் எகி​றி​வி​டும். பிரீ​பெய்ட் வாடிக்​கை​யா​ள​ராக இருந்​தால் உங்​க​ளது ரீசார்ஜ் கட்​ட​ணம் நீங்​கள் பேசா​ம​லேயே கரைந்து போயி​ருக்​கும். இந்த விஷ​யத்​தில் வாடிக்​கை​யா​ளர்​கள்​தான் எச்​ச​ரிக்​கை​யாக இருக்க வேண்​டும். விளம்​ப​ரங்​களை நம்பி பேசிக் கொண்​டி​ருந்​தால் பில் வரும்​போது வருத்​தப்​பட வேண்​டி​யி​ருக்​கும்.

Thursday, November 12, 2009

உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை கிரடிட், டெபிட் கார்டால் வங்கிகளுக்கு சிக்கல்

0 comments

இந்த ஆண்டில் புதிதாக எந்த பொருளாதாரச் சிக்கலும் ஏற்படாது. ஆனால் 2010ம் ஆண்டில் வங்கிகள் புதிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பெரும் வேலை இல்லாத் திண்டாட்டம் வங்கிகளை பாதிக்கக்கூடும். அத்துடன் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், நுகர்வுக் கடன்கள் மூலம் வங்கிகளுக்கு பிரச்சினை வரலாம் என உலக வங்கித் தலைவர் ராபர்ட் ஜோலிக் கூறினார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ராபர்ட் ஜோலிக் கலந்து கொண்டார். மாநாட்டு அரங்கில் செய்தியாளர்களுடன் பேசிய போது, 2010ல் ஆண்டில் வங்கிகள் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: இதுவரை, உலக நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரம் உதவியாக இருந்திருக்கிறது.

அமெரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக நாடுகள் ஏற்றுமதி செய்தன. இனி அத்தகைய நிலை இராது. அமெரிக்காவின் தேவைகள் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்காது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் பொழுது இந்த மாற்றத்தை வெற்றிகரமாக சமாளித்தாக வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரத் தேக்க நிலையில் இருந்து ஒரே நேரத்தில் விடுபட முடியாது. நாட்டுக்கு நாடு காலம், நேரம், முறை முதலியன மாறுபடக்கூடும். அதனால் உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்தால் சிக்கல்கள் குறையும். தேக்க நிலையில் இருந்து விடுபட புதிய ஊக்குவிப்புச் சலுகைகள் தேவை இல்லை. 2010ம் ஆண்டிலும் சலுகைகள் தொடரலாம் என்றார்.

ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வு: மைக்ரோசாஃப்ட் அறிமுகம்

0 comments
சிறிய, நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வுகளை அளிக்கும் புதிய முறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  இதன்படி மாதம் ரூ. 95 கட்டணத்தில் மின்னஞ்சல், இணையதள ஒருங்கிணைப்பு, மின்வழிச் சந்திப்பு சார்ந்த மென்பொருள் சேவைகளை இந்நிறுவனம் அளிக்கிறது. இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணத்தைச் செலுத்தி இச்சேவையைப் பெறலாம். ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ்டம்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக மைக்ரோசாஃப்ட் உடன்பாடு செய்துள்ளது.

  சோதனை அடிப்படையில் இந்த சேவை கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதை பல நிறுவனங்கள் பயன்படுத்திப் பார்த்து அதில் நல்ல பலன் கிடைத்துள்ளதைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இம்மாதம் 7-ம் தேதி முதல் முழு வீச்சில் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதாக மைக்ரோசாஃப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவின் செயல்முறை மேலாளர் சாஜு குட்டி தெரிவித்துள்ளார். 
 
இணையதள முகவரி: www.microsoft.com/india/onlineservices

ரூ.3,000க்கு கம்ப்யூட்டர் நிவியோ திட்டம்

0 comments
ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரூ.3,000 விலையில் கம்ப்யூட்டர் விற்பனையை இந்த மாதம் தொடங்க நிவியோ திட்டமிட்டுள்ளது.

"டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை ரூ.3,000க்கு விற்பனை செய்ய ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்" என நிவியோ தலைவர் சச்சின் துகல் கூறினார். ஏற்கனவே, மைக்ரோசாப்ட்,  ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் பிசி வசதியை நிவியோ அளிக்கவுள்ளது.

நிவியோ கம்பேனியன் என்ற கருவியை ரூ.4,999ல் அது அறிமுகம் செய்தது.

Wednesday, November 11, 2009

கூகுல் $750 மில்லியன் கொடுத்து வாங்கப்படும் பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்ட நிறுவனம்.

0 comments
கூகுல் $750 மில்லியன் கொடுத்து வாங்கப்படும் பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்ட நிறுவனம்.


கூகுள் நிறுவனம் $750 மில்லியன் டாலர் விலைக்கு AdMob என்ற மொபைல் விளம்பர சேவை நிறுவனத்தை வாங்கி உள்ளது. 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஒரு பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்டது.

மொபைல் தொழில்நுட்பம் மிகவும் வளராத காலத்தில் பல இன்னல்களை சந்தித்து வளர்ந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. iPhoneன் வரவுக்குப் பின்பு பல நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

AdMobஐ வாங்குவதன் மூலம் ஒரு நல்ல மொபைல் விளம்பர வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளம்பர தொழில்நுட்பத்தை கூகுள் வாங்குகிறது.

Techtamil

WIN FREE LAPTOP : http://ezlaptop.com/?r=904180

லேண்ட் லைன் வடிவில் மொபைல் போன் பி.எஸ்.என்.எல். அறிமுகம்

0 comments

முதியோர் எளிமையான முறையில் மொபைல் போன்களை கையளும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் லேண்ட் லைன் போன் வடிவில் மொபைல் போன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து பி.எஸ்.என்.எல். துணைக் கோட்டப் பொறியாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். நிறுவனம் மொபைல் போன்களை முதியோர் எளிமையான முறையில் கையாளும் நோக்கத்தில் லேண்ட் லைன் போன் வடிவில் அதே இயக்கத்தில் ஜி.எஸ்.எம். பிக்ஸ்ட் ஒயர்லெஸ் மொபைல் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போனில் சிம் கார்டுகளை செருகி பேசலாம். தரைவழி தொலைபேசியை எவ்வாறு கையாளுகின்றோமோ அதே போல் எளிமையாக இதை இயக்க முடியும்.

பிரீ பெய்ட், போஸ்ட் பெய்ட் 2 வகையான சிம் கார்டுகளில் எதை வேண்டுமானாலும் இதில் உபயோகிக்கலாம். மொபைல் போனில் உள்ள ஒலியின் தரத்தை விட இதன் ஒலி தெளிவாகவும் நன்றாகவும் இருக்கும். எல்லா பி.எஸ்.என்.எல். நிறுவனங்களிலும் தற்போது இந்த போன் கிடைக்கும். பிரீ பெய்ட் சேவையில் ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்ற திட்டம் தற்போது அமலில் உள்ளது. இந்த சேவையைப் பெற ரூ.45க்கான பூஸ்டர் கார்டை உபயோகிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாடு வட்டத்திற்குள் பேசும் போது ஒரு வினாடிக்கு ஒரு பைசா கணக்கிடப்படும். இதைத் தவிர ரூ.49க்கான பூஸ்டர் கார்டை உபயோகிக்கும் போது எந்த மொபைல் போனுக்கு பேசினாலும், எஸ்.டி.டி பேசினாலும் ஒரு நிமிடத்திற்கு 49 பைசா திட்டம் நடைமுறையில் உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் துணைக் கோட்டப் பொறியாளர்.

WIN FREE LAPTOP : http://ezlaptop.com/?r=904180 

Tuesday, November 10, 2009

இந்தியாவில் 8000 பேரை பணியமர்த்தும் அக்சென்சர்!

0 comments
அக்சென்சர் மற்றும் குளோபல் டெக்னாலஜி இணைந்து இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.


இந்தியாவில் இந்த நிறுவனங்களின் பணியாளர் எண்ணிக்கை 42000 ஆக உள்ளது. இந்த புதிய பணியாளர்களையும் சேர்த்து 50000 பேராக தங்கள் தொழிலாளர் பலத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அக்சென்சர் தலைவர் வில்லியம் டி கிரீன் தெரிவித்துள்ளார்.

வில்லியம் கிரீன் மேலும் கூறுகையில், "உலகம் மெல்ல மெல்ல சரிவிலிருந்து மீளத் துவங்கிவிட்டதன் அறிகுறிகள் தெரிகின்றன. குறிப்பாக இந்தியாவில் நிலைமைகள் மிகவும் சாதகமாக உள்ளன. எனவே இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது. அனலிடிக்ஸ் பிரிவில் இந்த பணியாளர்களை ஈடுபடுத்தப் போகிறோம். இந்தியாவில் இந்த பணிக்கு பெரிய அளவில் ஸ்கோப் இருக்கிறது.." என்றார்.

அக்சென்சரின் நடப்பு ஆண்டு வருவாய் 21.58 பில்லியன் டாலர்கள். இந்த ஆண்டு மருந்துகள் உற்பத்தி மற்றும் தொலைபேசித் துறை வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது அக்சென்சர்.

FREE LAPTOP PLAN Join http://ezlaptop.com/?r=904180

பொறியியல் பட்டதாரிகள் 75% பேர் தகுதி குறைவு்

0 comments
பொறியியல் பட்டதாரிகளில் 75 சதவீதம் பேருக்கு வேலைக்கான தகுதியில்லை என்று தொழில் துறை அமைப்பான நாஸ்காம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் இந்திய உயர் கல்வி குறித்த 6வது உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. அதில் இடம்பெற்ற குழு விவாதத்தில் வெளியான தகவல்களை அசோசேம் அமைப்பு, அறிக்கையாக வெளியிட்டது. நிகழ்ச்சியில் புனே பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சகஸ்ரபாது கூறுகையில், பொறியியல் பட்டதாரிகளுக்கு எளிதில் வேலை கிடைக்காததற்கு காரணம், படிப்பை முடித்து வெளிவரும்போது வேலைக்கான தகுதியோ, முன்அறிவோ இல்லாததே. இது முன்னணி கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்றார். நம்நாட்டின் பெரும்பாலான கல்லூரிகளின் கல்வித் திட்டமே பாட அடிப்படையிலானது. தொழிற் பயிற்சி, நேரடி அனுபவம் கிடையாது என்பதே காரணம் என்றார் அவர்.

FREE LAPTOP PLAN Join http://ezlaptop.com/?r=904180  

Saturday, November 7, 2009

அமெரிக்காவில் 27 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை!

0 comments


அமெரிக்கப் பொருளாதாரம்  சரியான திசையில் பயணிப்பதாக அதிபர் ஒபாமா சொல்லி வாய் மூடும் முன்பே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் காணாத உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது.


அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 190000 பேர் வேலை இழந்துள்ளனர்.


இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம்.

"நிச்சயம் இது கவலைப்படத்தக்க விஷயமே. அமெரிக்க நிர்வாகம் உடனடியாக இதில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்" என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளதுதான் ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் பயமுறுத்தி வருகிறது.

50 கோடியைத் தாண்டியது தொலைபேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை!

0 comments
இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மொத்தம் 509 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் இது 3.03 சதவிகித உயர்வாகும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் தெரிவித்துள்ளது.


இந்த உயர்வின் மூலம் இந்தியாவின் டெலிடென்சிட்டி 43.5 சதவிகிதமாக உள்ளது.

கம்பியில்லாத தொலைபேசி மற்றும் மொபைல் இணைப்புகள் பெற்றுள்ளோர் எண்ணிக்கை மட்டும் 471.73 மில்லியனாக உள்ளது.

மொபைல் சேவையைப் பொறுத்தவரை முதலிடத்தில் இருப்பது தனியார் நிறுவனமான பார்தி ஏர்டெல் 110.5 மில்லியன் சந்தாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 86.11 மில்லியன் சந்தாரர்களுடன் இரண்டாம் இடத்திலும், வோடபோன் 82.84 மில்லியன் சந்தாரர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.


அனைத்து வசதிகளும் கொண்ட அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 58.75 மில்லியன் சந்தாதாரர்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.


டாடா நிறுவனம் 5-ம் இடத்தில் உள்ளது. இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 46.79 மில்லியன்.


பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளோர் எண்ணிக்கை 7.22 மில்லியன். அதேநேரம் லேண்ட்லைன் இணைப்பு பெற்றவர்களில் 37.31 மில்லியன் சந்தாதாரர்கள் அவற்றை திரும்ப சரண்டர் செய்துள்ளர்.

Friday, November 6, 2009

எஸ்எம்எஸ் கட்டணம் விரைவில் குறைகிறது

0 comments
ஒரு விநாடிக்கு ஒரு பைசா என்ற அளவுக்கு செல்போனில் பேசும் கட்டணம் குறைந்ததைத் தொடர்ந்து, எஸ்எம்எஸ் கட்டணமும் விரைவில் குறைகிறது. டொகோமோவை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விநாடி அடிப்படையிலான கட்டண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. எனினும், எஸ்எம்எஸ் கட்டணம் மட்டும் தேர்ந்தெடுத்த திட்டத்தைப் பொறுத்து 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. உண்மையில் எஸ்எம்எஸ் டெலிவரி செய்ய போன் நிறுவனத்துக்கு ஒரு பைசாவுக்கு குறைவான செலவே ஆகிறது. எனவே, எஸ்எம்எஸ் கட்டணம் முழுவதும் போன் நிறுவனத்தின் வருமானம்தான். அத்துடன், போன் பேச விநாடி அடிப்படையில் கட்டணம் வந்து விட்டதால், எஸ்எம்எஸ் அனுப்புவது பெருமளவு குறைந்து விட்டது. அனுப்ப வேண்டிய தகவலை போன் செய்தே சுருக்கமாக கூறி விடுவதை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இதனால், எஸ்எம்எஸ் கட்டணத்திலும் போட்டியைத் தொடங்க போன் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. புதியதாக வரவுள்ள நிறுவனங்களுக்கு முன்னதாக முந்திக் கொள்ள பழைய நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. எனவே, எஸ்எம்எஸ் கட்டணமும் ஒரு பைசா முதல் 10 பைசாவுக்குள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லே ஆஃப்... அதிர்ச்சியில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

0 comments


விண்டோஸ் 7 வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஆட்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இந்த வார இறுதிக்குள் மேலும் 1200 ஊழியர்களை நீக்க மைக்ரோசாப்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5000 பணியாளர்களை நீக்குவதாக அறிவித்த மைக்ரோசாப்ட், படிப்படியாக அதைச் செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில் மேலும் சில ஊழியர்களை நீக்குவதாக நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.

இன்றைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டே இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இப்போதைய புதிய ஆட்குறைப்பில் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள் மற்றும் சீனர்களே எனத் தெரிய வந்துள்ளது.

இன்னொரு பக்கம் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் குறைந்த அளவு பணியாளர்களை புதிதாக நியமிக்கிறது மைக்ரோசாப்ட். ஆனால் லே ஆஃப் செய்யப்படும் ஊழியர் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவேயாகும்.

உறுதி செய்த மைக்ரோசாப்ட்:

இந்நிலையில் பணியாளர் நீக்கம் குறித்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதுவரை 800 பேர் நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதிப் பட்டியலில் இன்னும் கூடுதலான பணியாளர்கள் இடம்பெறுவார்கள் என்றும் இன்று வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 23-ம் தேதி நிலவரப்படி 91 ஆயிரம் நேரடி பணியாளர்கள் மைக்ரோசாப்டில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தப் பணியாளர்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

Thursday, November 5, 2009

நோக்கியா, சீமென்ஸில் 5,000 பணியாளர் குறைப்பு!

0 comments

முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான நோக்கியா மற்றும் சீமென்ஸில் 5,000 பணியாளர்கள் குறைக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

நோக்கியா - சீமென்ஸ் நெட்வார்க்கில் உலகம் முழுக்க 64000 பணியாளர்கள் உள்ளதாகவும், இவர்களில் 7 முதல் 8 சதவிகித ஊழியர்கள் நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் நிலையில் சற்று முன்னேற்றம் தெரிந்தாலும், செலவுக் குறைப்பு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்த முடிவை மேற்கொண்டதாக நோக்கியா அறிவித்துள்ளது.

வரும் 2011-ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் யூரோ அளவுக்கு செலவுக் குறைப்பு செய்ய வேண்டியுள்ளதாம் இந்த நிறுவனங்கள். இந்த ஆண்டு 550 யூரோ அளவுக்கு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனவாம்.

ஐ.டி., பிபிஓ நிறுவனங்களில் சம்பளம் 16% வரை குறைப்பு

0 comments
சர்வதேச நிதி நெருக்கடியால் ஐ.டி., அவுட்சோர்சிங் நிறுவன ஆர்டர்கள் சரிந்துள்ள நிலையில், முன் அனுபவம் இல்லாத ஊழியர்கள் சம்பளத்தை நிறுவனங்கள் 16 சதவீதம் வரை குறைத்து விட்டன. சர்வதேச நிதி நெருக்கடியால் இந்தியாவின் ஆர்டர்கள் குறைந்து ஐ.டி., பிபிஓ நிறுவனங்களின் லாபம் பாதித்தது. இப்போது நிலைமை சீராகி வந்த போதிலும், புதிதாக பணியில் சேர்க்கப்படும் அனுபவமற்ற பட்டதாரிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட சம்பளம் இப்போது அளிக்கப்படுவதில்லை. ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ், பொறியியல் பட்டதாரிகள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். டிசிஎஸ், இன்போசிஸ் உட்பட நூற்றுக்கணக்கான ஐ.டி., சேவைத் துறையில் வேலைக்காக விண்ணப்பிக்கின்றனர். ஐ.டி. நிறுவனங்களின் நிலைமை ஓராண்டுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லாததால், பாதிக்கு மேற்பட்டோருக்கு வேலை கிடைப்பதில்லை. படிப்பை முடித்து புதிதாக வேலை தேடுவோரின் சம்பளம் 10 முதல் 16 சதவீதம் வரை குறைந்து விட்டது.

போன் எண்ணிக்கை 50 கோடியாக உயர்வு

0 comments
நம்நாட்டில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம், அடுத்த ஆண்டு இறுதிக்கான இலக்கு 15 மாதங்கள் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது. செல்போன், லேண்ட்லைன் உட்பட அனைத்து வகை போன் இணைப்புகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இறுதிக்குள் 50 கோடியாக அதிகரிக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 30ம் தேதியே இந்த இலக்கு எட்டப்பட்டு விட்டதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இது 15 மாதங்கள் முன்னதாக நடந்துள்ள சாதனை. ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி நம்நாட்டில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 49 கோடியே 40 லட்சமாக இருந்தது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை 50 கோடியே 90 லட்சமாக அதிகரித்தது. இது 3.03 சதவீத உயர்வு. அதன்மூலம், இப்போது 50 கோடிக்கு மேற்பட்டோரிடம் போன் உள்ளது. நாட்டின் 120 கோடி மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், 100 பேருக்கு 43 பேரிடம் இப்போது போன் உள்ளது. அதில் 40 பேரிடம் செல்போன் இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் செல்போன் நிறுவனங்கள் 1.51 கோடி புதிய இணைப்புகளை அளித்துள்ளன. அதிக செல்போன் எண்ணிக்கையில் உலகிலேயே சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 2வது இடம் வகிக்கிறது. சீனாவில் 60 கோடி பேருக்கு மேல் போன் இணைப்பு வைத்துள்ளனர். விநாடி அடிப்படையில் கட்டணத்தை பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது அறிவித்துள்ளதால் போன் இணைப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, November 4, 2009

வெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் வரும்- ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை

0 comments

புதிய தலைமுறை வெப் முகவரிகளுக்கு உலக நாடுகள் மாறா விட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்படும் என ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய கமிஷன் கூறுகையில், இன்டர்நெட் புரோட்டோகால் வெர்சன் 6 அல்லது ஐபிவி6 (IPv6) தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டிய அவசரம், அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.

ஐபிவி6 தயாராகி பத்து வருடங்களாகி விட்டது. இதன் மூலம் 340 டிரில்லியன் வெப் முகவரிகளைத் தர முடியும். ஆனால் தற்போது உள்ள ஐபிவி4 தொழில்நுட்பத்திலிருந்து, ஐபிவி6க்கு மாற வெகு சில வர்த்தக நிறுவனங்களே தயாராக உள்ளன.

ஆனால் புதிய தொழில்நுட்பத்துக்கு விரைவில் வர்த்தக நிறுவனங்கள் மாறுவது அவசியம், அவசரம். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளை ஒதுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு இணையதளத்துக்கும் ஐபி முகவரி உண்டு. இது எண்களால் குறிப்பிடப்படப்படுகிறது. (உ.ம்) - 192.168.1.1. ஐபி முகவரி கொடுக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில், நினைவில் கொள்ளும் வகையில் வேறு பெயர்கள் சூட்டப்படுகின்றன. (உ.ம்) தட்ஸ்தமிழ்.ஒன்இந்தியா.இன்.

தற்போது நடைமுறையில் உள்ள ஐபிவி4 தொழில்நுட்பம், 32 பிட் முகவரிகளைக் கொண்டதாக உள்ளது. இதன் மூலம் 4.3 பில்லியன் வெப் முகவரிகளை கையாள முடியும். ஆனால் ஐபிவி 6 தொழில்நுட்பம் 128 பிட் கொண்டதாகும். இதன் மூலம் பல பில்லியன் புதிய வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.

ஐபிவி6 தொழில்நுட்பம் குறித்து ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆசியாவைச் சேர்ந்த 610 அரசு, கல்வி மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களிடம் கருத்து அறியப்பட்டது. இதில் வெறும் 17 சதவீதம் பேர்தான் ஐபிவி6க்கு ஆதரவாக கருத்தளித்துள்ளனர் என்கிறது ஐரோப்பிய ஆணையம்.

இன்டர்நெட்டின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மெதுவாக மாறி விடுவதுதான் நல்லது என்கிறது இந்த ஆணையம்.

இதுகுறித்து ஆணையத்தின் தகவல் தொடர்பு செயலாளர் டெட்லெப் எக்கெர்ட் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சமூக, பொருளாதார துறைகளில் இன்டர்நெட் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகி விட்டது. விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

எனவே ஐபிவி6 தொழில்நுட்பத்திற்கு மாறுவதே அனைவருக்கும் நல்லது, குறிப்பாக இன்டர்நெட்டுக்கு நல்லது என்றார்.

விவரமாய் பேசும் சாந்தனு ; விழி பிதுங்கிய பாக்யராஜ்

0 comments
சித்து பிளஸ் 2 பர்ஸ்ட் அட்டம்ப்ட் - இது பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு நாயகனாக நடித்திருக்கும் படம். படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக சாந்தினி என்ற கல்லூரி மாணவி நடித்திருக்கிறார். இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், சூட்டிங் ஸ்பாட்டில் சாந்தனுவால் தான் விழிபிதுங்கிய கதையை தனக்கே உரிய பாணியில் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். சாந்தனுவோ விவரமாய்‌ பேசி ஆச்சர்யப்படுத்தினார். பாக்யராஜ் பேசுகையில், நான் அமிதாப்பச்சனையே வச்சு படம் எடுத்திட்டேன். ஆனால், இவனை வைச்சு எடுக்கறதுக்குள்ளே ஒரு வழியாகிட்டேன். எல்லாத்துலேயும் தலையிடுறான். கம்போசிங்கில் உட்கார்ந்தா அங்க ஒரு கரெக்ஷன். டயலாக் சொல்லிக் கொடுத்தா அதிலே இன்னும் ரெண்டு வரி சேர்த்து சொல்றான். கேமிராவை இங்க வக்கலாம்னு சொன்னா, இது வேணாம். அங்க வையுங்கிறான். சொந்த புள்ளைய வச்சு படம் எடுக்கறது பயங்கர கஷ்டம்ப்பா என்றார். அப்போது குறுக்கிட்ட சாந்தனு, யூத்துங்க சைக்காலஜி எனக்குதானே தெரியும்? அதைதான் நான் சொன்னேன். நான் சொன்ன கரெக்ஷனை யூனிட்ல இருக்கிறவங்களே ரசிச்சாங்க தெரியுமா? என்று சொன்னதுடன், அப்பா படம்ங்கிறதாலதான் நான் தலையிட்டேன். இதுவே வேற டைரக்டர்னா அவரு என்ன சொல்றாரோ, அதான். அப்படியே நடிச்சு கொடுத்திருவேன், என்றும் விவரமாய் பேசினார்.

Tuesday, November 3, 2009

ஸ்ஸ்... அப்பாடா! நிம்மதிப் பெருமூச்சில் ஐடி நிறுவனங்கள்!

0 comments

இந்திய ஐடி நிறுவனங்கள் சற்றே நிம்மதிப்பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. காரணம், 'இப்போ முடியுமா... இன்னும் நாளாகுமா' என இழுத்துக் கொண்டே இருந்த அமெரிக்க பொருளாதார மந்த நிலை, மெல்ல மெல்ல மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருப்பதுதான்.

யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி 3.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதைப் பார்த்த பிறகுதான், அமெரிக்கப் பொருளாதாரம் சரியான திசையில்தான் போகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார் அவர்.

அமெரிக்காவின் பெரிய ஐடி நிறுவனங்கள், மீட்சி நிலையை உறுதிப்படுத்தியுள்ளன. 2010 மத்தியில் மீண்டும் வழக்கமான வளர்ச்சி நிலைக்குத் திரும்பிவிடும் என்றும் இந்த நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கார்ட்னர் என்ற ஆராய்ச்சி நிறுவனம், "2010-ல் ஐடி நிறுவனங்களின் உற்பத்தி செலவு மட்டும் 3.3 ட்ரில்லியன் டாலராக இருக்கும். இது நடப்பு ஆண்டை விட 3.3 சதவிகிதம் அதிகம்" என்று குறிப்பிட்டுள்ளது.

2010-ல் நிறுவனங்கள் வளர்ச்சி நிலைக்குத் திரும்பினாலும், ஏற்கெனவே 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தை அவை ஈடுகட்ட வேண்டியிருப்பதால், 2012-ல்தான் லாபம் பார்க்க முடியும் என்றும் இந்த கணிப்புகள் கூறுகின்றன.

ஆனால் இந்திய ஐடி துறையைப் பொறுத்தவரை அமெரிக்காவில் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தெரியத் துவங்கியபோதே, இங்கு சாதகமான நிலைமைகள் திரும்ப ஆரம்பித்துவிட்டன என்கிறார்கள்.

இன்போஸிஸ், டாடா கன்ஸல்டன்ஸி மற்றும் விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களின் நிகர லாப அளவு இந்த காலாண்டில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தன. இதன் விளைவு, இம்மூன்று நிறுவனங்களுமே, முதலீட்டுச் செலவை அதிகரித்துவிட்டன. சம்பள உயர்வையும் அறிவித்துள்ளன.

விப்ரோ நிறுவனம்தான் அதிக நம்பிக்கை தெரிவித்துள்ளது வரும் காலாண்டின் வர்த்தகம் குறித்து. அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 2.5 முதல் 3 சதவிகித வருவாய் உயர்வு நிச்சயம் இருக்கும் என்கிறது விப்ரோ. இது உண்மையில் மிகப்பெரிய விஷயம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆனால் விப்ரோவின் இணை தலைமை நிர்வாகி சுரேஷ் வாஸ்வானி, "எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பலம், விற்பனை போன்றவற்றின் அடிப்படையில் இந்த குறியீட்டளவை வெளிப்படுத்தியுள்ளோம். நிச்சயம் எங்களால் இதற்கு மேலும் சாதிக்க முடியும்" என்கிறார்.

நாட்டின் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், தனது இந்த காலாண்டின் வருமானத்தில் 58 சதவிகித பங்கு அமெரிக்காவிலிருந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இன்னும் வருகிற நாட்களில் அமெரிக்காவில் நிலைமை முழுமையாக சீரடையும்போது இந்த அளவு நிச்சயம் அதிகரிக்கும் என்கிறது அந்த நிறுவனத்தின் அறிக்கை.

நாஸ்காம் தலைவர் சோம் மித்தல் கூறுகையில், "இந்த நிதியாண்டின் முதல் பாதி எந்த பெரிய மாறுதலும் இல்லாமல்தான் முடிந்திருக்கிறது. ஆனால் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டில் நல்ல மாறுதல் வரும். மேலும் இந்த காலகட்டம் நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சி காணவேண்டும்," என்றார்.

சாம்சங்கின் ஆம்னியா!

0 comments
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் ஆம்னியா-2 ஜிடி (18000) என்ற புதிய ரக செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச் சிறந்த மல்டி மீடியா வசதிகள், யூஸர் இண்டர்ஃபேஸ், அதிவேக இணைப்புத்திறன் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும். விண்டோஸ் 6.1 தளத்தில் செயல்படும் ஆம்னியா-2 ஸ்டைல், மல்டிமீடியா மற்றும் வர்த்தக செயல்பாடுகளை ஒருங்கே வழங்கும். புத்தம் புதிய உயர் செயல்பாட்டுத்திறன் கொண்ட முழு தொடுதிரை போனாகும். இதில் டிஜிட்டல் தரத்திலான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் எடுக்க முடியும். விலை ரூ. 28,990.

ரிலையன்ஸ் மூலம் மைக்ரோசாஃப்ட் வசதி

0 comments
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் அங்கமான ரிலையன்ஸ் தகவல் மையம் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் தளத்தில் செயல்படும் சாஃப்ட்வேரை அளிக்கும் சேவையை அளிக்க உள்ளது. இதன்படி மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேரைப் பயன்படுத்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சாஃப்ட்வேர் தீர்வுகள், பயன்பாட்டு முறைகள், சேவைகளை ரிலையன்ஸ் மூலம் பெறலாம். இத்தகைய சேவையை கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் ரிலையன்ஸ் வழங்குகிறது.  இதன்படி இணையதளத்தில் புதிய தகவல்களை சேர்த்தல் (சர்வஸ் ஹோஸ்டிங்), தகவல்களை பதிவு செய்தல் (டேட்டா ஸ்டோரேஜ்), ஆவணக் காப்பகம் (ஆர்ச்சீவ்ஸ்) ஆகியன மட்டுமின்றி அன்றாட வணிக நடைமுறைகளுக்குத் தேவையான மின்ஞ்சல், இஆர்பி, தானியங்கி படிநிலை இயக்கம், ஆவண மேலாண்மை, தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடு, அறிக்கை தயார் செய்தல், அழிவிலிருந்து மீட்டல், ஃபயர்வால் சேவைகள் மற்றும் தானியங்கி பாதுகாப்பு மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த சேவை மையமாக இந்த மென்பொருள் தீர்வு அமைகிறது.  மைக்ரோசாஃப்ட் தயாரித்து அளித்துள்ள தொழில்நுட்பத்தை எளிதில் பெறுவதற்கு ரிலையன்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் செலவு குறையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா: 1000 பெண் ஆபரேட்டர்களை தேர்வு செய்யும் அரசு!

0 comments

நோக்கியா நிறுவனத்தில் வேலைக்கு சேர 1000 பெண்களை ஆபரேட்டர் ட்ரெயினியாக தேர்வு செய்கிறது தமிழக அரசு.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. மாத ஊதியம் ரூ. 4400 மற்றும் இலவச உணவுடன் ரூ. 1000-க்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ. சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும்.

பிளஸ்-2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும், என்று அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Monday, November 2, 2009

கூகுள் வழிதான் இன்டர்நெட் இயங்குகிறது

0 comments
பெரும்பாலான இன்டர்நெட் போக்குவரத்து, கூகுள் வழி தான் இயங்குகிறது என்பது சற்று மிகைப் படுத்திக் கூறப்படும் செய்தியாகத் தெரியலாம்; ஆனால், அதுதான் உண்மை என இது குறித்து ஆய்வு நடத்திய பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேனல்கள் வழியாகத்தான் இன்டர்நெட் டிராபிக் ஏற்படுகிறது. ஜிமெயில், ஆர்குட், யு–ட்யூப், நால் எனப் பல இருந்தாலும், பெரும்பாலான இன்டர்நெட் பயன்பாடு யு–ட்யூப் வழியாகவே ஏற்படுகிறது. மொத்த இன்டர்நெட் ட்ராபிக்கில் 6% கூகுள் வழி உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், இன்டர்நெட் என எடுத்துக் கொண்டால் அது பல்லாயிரக்கணக்கான நெட்வொர்க் வழி இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இன்டர்நெட் பயன்பாட்டில் 50 சதவிகிதத்தை 15 ஆயிரம் நெட்வொர்க்குகள் மேற்கொண்டன. இப்போது அதே 50 சதவிகிதத்தினை 150 நெட்வொர்க்குகள் மட்டுமே மேற்கொள்கின்றன. பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் வழி 30% இன்டர்நெட் டிராபிக் ஏற்படுகிறது. இப்போதைய மாற்றம் வீடியோ ஸ்ட்ரீமிங் வழியில் அதிகம் ஏற்பட்டுள்ளது. மொத்த வெப் டிராபிக்கில் 20% வீடியோ சார்ந்ததாகவே உள்ளது. தகவல்களுக்காக இணைய தகவல் தளங்களைத் தேடுவது இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 சதவிகிதத்திலிருந்து 52 % ஆக உயர்ந்துள்ளது. மற்றவை இமெயில் மற்றும் தனியார் நெட்வொர்க் சார்ந்து உள்ளன.

Related Posts with Thumbnails