Sunday, December 6, 2009

புதிய ஐஎம்இஐ எண்கள் சில நாளில் செயலிழக்கும்

2 comments

சீன செல்போன்களுக்கு அசல் ஐஎம்இஐ எண் பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகு பெறப்படும் எண்கள் சில நாட்களில் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு இணைப்பை ரத்து செய்ய போன் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டது.
அதற்கான காலக்கெடு கடந்த 30ம் தேதி முடிந்தது. அதற்கு முன் சில மாதங்களாக சீன செல்போன்களுக்கு அசலான ஐஎம்இஐ எண்ணைப் பெற செல்போன் நிறுவனங்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வசதியும் கடந்த 30ம் தேதியோடு முடிந்த நிலையில், சில நிறுவனங்கள் ரூ.300 முதல் ரூ.500 வரை பெற்றுக் கொண்டு தொடர்ந்து ஐஎம்இஐ எண் அளித்து வருகின்றன.
நிபுணர் ஒருவர் கூறுகையில், காலக்கெடு முடிந்த பிறகு ஐஎம்இஐ எண் அளிப்பது சட்ட விரோதம். இப்போது பெறப்படும் எண்களுக்கு செல்போன் நிறுவனங்கள் சங்கம் பொறுப்பேற்காது. அவை  சில நாட்களில் ரத்தாகி விடும் என்றார்.

இன்னிலையில் ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் தங்களது தயாரிப்பில் உள்ள ஐஎம்இஐ எண் நம்பகமானதுதான் என தமது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் உறுதி அளித்துள்ளது.

மேலும் ஸ்பைஸ் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அருகில் உள்ள விநியோகஸ்தரிடம் சென்று இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

--தினகரன்

3 ஜி: 94455 55555 எண் ரூ1.8 லட்சத்துக்கு ஏலம்-பிஎஸ்என்எல்லுக்கு ரூ.8 லட்சம் லாபம்!

0 comments

பி.எஸ்.என்.எல். 3 ஜி மொபைல் போன் எண்களை ஏலத்தில் விட்டதில் சென்னையில் 8 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

அதிகபட்சமாக, ஒரு எண் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ கால் வசதி கொண்ட 3 ஜி சேவையை சமீபத்தில் பி.எஸ்.என்.எல். சென்னையில் அறிமுகப்படுத்தியது.

இந்த சேவையை தங்களுக்குப் பிடித்தமான பேன்ஸி எண்களுடன் பெற போட்டி போட்டனர் வாடிக்கையாளர்கள். எனவே வாடிக்கையாளரின் இந்த ஆர்வத்தை காசாக்கும் முயற்சியில் இறங்கிய பிஎஸ்என்எல், 292 'பேன்சி' எண்களை ஏலத்தில் விட முடிவு செய்தது.

ஏற்கனவே, 2 ஜி சேவைக்கான எண்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்த அனுபவம் பிஎஸ்என்எல்லுக்கு உண்டு.

எனவே 3 ஜி எண்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் ஒவ்வொரு பேன்சி எண்ணுக்கும் குறைந்த பட்ச தொகையாக ஆயிரம், 2,000, 3,000 என நிர்ணயிக்கப்பட்டு நூறின் மடங்காக ஏலம் கேட்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஏலத்தில், 93 எண்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த, '3 ஜி' எண்கள் அனைத்தும் 94455 என துவங்குமாறு அமைந்துள்ளது.

இந்த ஏலத்தில் குறிப்பாக 94455 55555 என்ற எண் மட்டும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 99999 என முடியும் எண், 77 ஆயிரம் ரூபாய்க்கும், 56789 என முடியும் எண், 62 ஆயிரம் ரூபாய்க்கும், 66666 என முடியும் எண் 30,300 ரூபாய்க்கும், 12345 என முடியும் எண் 30 ஆயிரம் ரூபாய்க்கும், 94455 என முடியும் எண் 28 ஆயிரத்திற்கும், 11111 என முடியும் எண் 15 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டன.

இதன் மூலம், மூலம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.

மீதியுள்ள எண்கள் அடுத்த வாரம் ஏலம் விடப்படுமாம்.

சர்வீஸை துவங்கியது சர்ச்சைக்குரிய டெலினார்

0 comments

பெரும் சர்ச்சைக்கும் சந்தேகப் பார்வைக்கும் ஆளான டெலினார்- யூனிடெக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான யூனினார் தனது மொபைல் சேவையைத் துவங்கியது.

நார்வேயைச் சேர்ந்த நிறுவனம் டெலினார். இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கின் 74 சதவீதப் பங்குகளை சர்ச்சைக்குரிய முறையில் வாங்கியது இந்த நிறுவனம். பின்னர் யூனிடெக்கின் பெயரைப் பயன்படுத்தி பல பெயர்களில் இந்தியாவில் கூட்டாக மொபைல் சேவையைத் துவங்க லைசென்சுக்கு விண்ணப்பித்தது.

போட்டியிட்ட பிற நிறுவனங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்த நிறுவனத்துக்குதான் 2 ஜி அலைவரிசையை ஒதுக்கியது மத்திய தொலைத் தொடர்புத் துறை.

பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வெறும் ரூ.1651 கோடிக்கு யூனிடெக் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
UNINOR

அதுமட்டுமல்ல, 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெறும்வரை டெலினார் நிறுவனத் தொடர்பு பற்றி பேசாமல் இருந்த யூனிடெக், அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அடுத்த சில வாரங்களுக்குள் டெலினாருடன் கூட்டணி சேர்ந்ததாக அறிவித்து, தனது 60 சதவிகித பங்குகளையும் டெலினாருக்கு மாற்றியது. யாரும் பிரச்சனை செய்யக் கூடாது என்பதால், யூனினார் என்ற புது நிறுவனத்தை கணக்கில் கொண்டு வந்தது.

இதனைக் கவனித்த இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத் துறை யூனிடெக்கின் மொபைல் சர்வீசுக்கு அனுமதி தருவதை நிறுத்தி வைத்தன.

அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இது மிகமிக முக்கியாமானது. இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது இந்த டெலினார் நிறுவனம். இவர்களிடம் 2 ஜி அலைவரிசையை ஒப்படைத்தால் தேசத்தின் பாதுகாப்பு என்ன ஆவது என்று பாதுகாப்புத் துறை எழுப்பிய கேள்விக்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்.

மாறாக உயர்மட்ட அளவில் நடந்த பேரங்களுக்குப் பின் யூனினார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.

இந் நிலையில் தான் அமைச்சர் ராஜாவின் அலுவலகம் சிபிஐ சோதனைக்கு உள்ளானதும், ராஜா விசாரிக்கப்பட்டதும் நினைவிருக்கும்.

இப்போது அதே யூனினார் நிறுவனம் கோலாகலமாக தனது மொபைல் சர்வீஸைத் துவங்கியுள்ளது.

இந்த புதிய மொபைல் சேவையில் உள்ளூர் கட்டணம் வெறும் 29 பைசாதான். எஸ்டிடி கட்டணம் 49 பைசா.

எடுத்த எடுப்பிலேயே 7 தொலைத் தொடர்பு வட்டங்கள், 1000 டீலர்கள், ரூ 2620 முதலீடு என பிற நிறுவனங்களை ஆட்டம் காண வைக்கும் வேகத்துடன் வருகிறது யூனினார்.

Related Posts with Thumbnails